
பேராசிரியர் ப. குமார்..... திருவாரூரில் அமைந்துள்ள நடுவண் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியர். என்னுடைய சிறந்த மாணவர்களில் ஒருவர். உழைப்பால் உயர்ந்த ஒருவர். தமிழ், மொழியியல் இரண்டிலும் குறிப்பிடத்தக்க ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொண்டுவருபவர். சமூக உணர்வு உடையவர். பழகுவதற்கு இனிமையானவர்... எளிமையானவர். அவர் பணி சிறக்க எனது வாழ்த்துகள்.
முனைவர் ப. குமார் (1976) … தமிழாய்வுலகில் இன்றைய இளம் தலைமுறையைச் சேர்ந்த ஒரு ஆய்வாளர். செயலாற்றல் மிகுந்த ஒரு ஆய்வாளர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழித்துறையில் தமிழில் முதுகலைப் பட்டம் (2000), ஆய்வியல் நிறைஞர் பட்டம் (2001) முனைவர் பட்டம் (2008) ஆகியவற்றைப் பெற்றவர். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்...