சனி, 22 மார்ச், 2025

தமிழும் ஆங்கிலமும் . . .

 தமிழும் ஆங்கிலமும் . . . ------------------------------------------------நான் ஒரு மொழியியல் மாணவன்; ஒரு தமிழ் ஆசிரியரும்கூட.ஐம்பது ஆண்டுகளுக்குமேலாக மொழியியல் துறையில் ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறேன்! மொழியியல் ஆய்வுகளில் பல்வேறு கோட்பாடுகளை விளக்குவதற்கு மொழியியல் அறிஞர்கள் எந்தவொரு குறிப்பிட்ட மொழியையும் அடிப்படையாகக்கொண்டு தங்கள் ஆய்வுகளை முன்வைக்கமாட்டார்கள். எந்தவொரு மொழியையும் மற்ற மொழிகளைவிடச் சிறப்பான மொழி, உயர்வான மொழி என்று கொள்ளமாட்டார்கள். அதற்கு எந்தவித அறிவியல் அடிப்படையும் கிடையாது என்பது அவர்களுக்குத் தெரியும்! மொழியியல் ஆய்வுகளில் பல்வேறு மொழிகளைப்பற்றிய குறிப்புகள் கிடைக்கும். ஒரு கோட்பாட்டை விளக்குவதற்குப் பல மொழிகளை முன்வைத்துக் கருத்து தெரிவிப்பார்கள். எடுத்துக்காட்டாக, முதுபெரும் மொழியியல் அறிஞர் நோம் சாம்ஸ்கியின் மாற்றிலக்கணக் கோட்பாடானது நூற்றுக்கணக்கான மொழிகளுக்குப்...

ஆட்சிமொழி, பயிற்றுமொழி தொடர்பாக . . .

 ஆட்சிமொழி, பயிற்றுமொழி தொடர்பாக . . . -----------------------------------------------------------------------இந்தியாவின் ஆட்சிமொழி இந்திமொழிதான் என்பதில் காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டுமே உறுதியாக இருக்கின்றன. ஆனால் இதுபற்றி அவற்றுடன் கூட்டணிகள் அமைக்கும் கட்சிகள் பேசுவதில்லை. ஒரு முன்நிபந்தனையாக இதை வைக்கலாம். ஆனால் வைப்பது கிடையாது. அவர்களைப்பொறுத்தமட்டில் தேர்தல் கூட்டணி என்பது வேறு! கொள்கை, திட்டம் என்பது வேறு. தேர்தல் வெற்றியே முதன்மையானது. ஆனால் மொழிதொடர்பான கொள்கையில் மாற்றம் சாத்தியமில்லை என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இந்திபேசாத மக்கள் சிறுபான்மையாக இருந்தாலும்கூட, எல்லோருக்குமான இந்தியக் குடியரசில் அனைத்துமொழிகளுக்கும் சம உரிமை அளிக்கவேண்டும். தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதிதானே! அதன் மொழி தமிழ்தானே! அதற்கு ஏன் இந்திமொழிக்கு அளிக்கப்பட்டுள்ள ஆட்சிமொழி தகுதி அளிக்கக்கூடாது? எது...

தொழிற்பெயர் பற்றி . . . தமிழ்மொழி ஆய்வாளர்கள், மாணவர்கள் பார்வைக்கு

 தொழிற்பெயர் பற்றி . . . தமிழ்மொழி ஆய்வாளர்கள், மாணவர்கள் பார்வைக்கு . . ----------------------------------------------------------------------------------------------------- 'நடை' என்பது தொழிற்பெயரா , முழுப்பெயரா என்ற வினாவுக்கு விடை தர முயன்ற வேறு ஒரு பதிவில் நான் மேற்கோள் காட்டிய மூன்று மொழியியல் பேராசிரியர்களின் கருத்துகள் . . . தமிழ் மாணவர்களுக்குப் பயன்படலாம் என்பதால் அதை இங்குத் தனியாகவும் பதிவிடுகிறேன். மொழியியல் பேராசிரியர்கள் ச. அகத்தியலிங்கம், பொற்கோ , கு. பரமசிவம் மூவரும் இதுபற்றித் தெளிவாக எழுதியுள்ளார்கள். பேரா. அகத்தியலிங்கம் அவர்கள் வினையிலிருந்து பிறக்கும் மூவகைப்பெயர்களைக் குறிப்பிடுகிறார். (1) ஆக்கப்பெயர் ( முழுமையாகப் பெயர்த்தன்மை கொண்ட சொற்களாக மாறியவை - 'ஆக்கம்' , 'அழிவு', 'வாழ்க்கை' ), (2) காலம்காட்டாத்தொழிற்பெயர் ( வினைத்தன்மையும் பெயர்த்தன்மையும் உடைய...

மொழி இலக்கண அறிவு செய்யறிவுத்திறன் மென்பொருள்களுக்குத் (Artificial Intelligence - AI) தேவையா?

 மொழி இலக்கண அறிவு செய்யறிவுத்திறன் மென்பொருள்களுக்குத் (Artificial Intelligence - AI) தேவையா? ---------------------------------------------------------------------------------------------------------நாம் நமது கருத்து வெளிப்பாட்டுக்கும் பரிமாற்றத்திற்கும் (Communication) அடிப்படையாகப் பயன்படுத்துவது நமது இயற்கைமொழிகளையே (Verbal means) ! மொழிகளோடு நமது முகத்தோற்றம், கை , கால், உடல் அசைவுகள், படங்கள், குறியீடுகள் போன்றவையும் (Non-verbal means) பயன்படுத்துகிறோம். இவற்றிற்கும் கருத்துப் பரிமாற்றத்தில் ஒரு முக்கிய இடம் உண்டு. இருப்பினும் மொழிகளே அடிப்படையானவை. பிறந்த குழந்தை ஒரு சில வருடங்களில் - குறிப்பாக மூன்று , நான்கு வருடங்களில் - தனது தாய்மொழிவழிக் கருத்துப்புலப்படுத்தத்திறனை (Communicative ability) வளர்த்துக்கொள்கிறது. அதன் மூளைக்குள் தாய்மொழியின் இலக்கணம் (Grammar) , சொற்களஞ்சியம்...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India