தொழிற்பெயர் - ஆக்கப்பெயர் . . . ஓர் ஐயம்!இலக்கண ஆய்வாளர்களின் கருத்து தேவை! -------------------------------------------------------------------------சில பாட இலக்கண நூல்களில் 'படிப்பு' 'ஓட்டம்' 'நடை' 'வருகை' 'பயிற்சி' 'முயற்சி ' 'அயர்ச்சி' 'தளர்ச்சி' போன்ற சொற்கள் தொழிற்பெயர்கள் என்று கூறப்பட்டுள்ளன. 'அவ்வாறு இல்லை, வினையிலிருந்து பிறந்திருந்தாலும், இவையெல்லாம் முழுப்பெயர்களாகவே தொடர்களில் செயல்படுகின்றன' என்று வேறு சில நூல்களில் கூறப்பட்டுள்ளன. இவற்றிற்கும் தொழிற்பெயர்களுக்கும் வேறுபாடு உண்டு என்று கூறப்படுகிறது. இதில் என்ன முடிவு எடுக்கலாம்? 1) 'படித்தல்' 'ஓடுதல்' 'முயலுதல்' போன்றவை வினையிலிருந்து பிறந்த வினைநடைப்பெயர்கள் - அதாவது தொழிற்பெயர்கள்; இவற்றிற்குப் பெயர்த் தன்மையும் இருக்கிறது - 'வேற்றுமை ஏற்கிறது'!. அதேவேளையில் வினைக்குமுன்னர் வரும் வினையடைகளை ஏற்பதால் வினைப்பண்பும்...