''தமிழ் மேம்பாட்டுத் திட்டத்தின்'' ஒரு பணி! ''தமிழ் மேம்பாட்டுத் திட்டத்தின்'' ஒரு பணி!---------------------------------------------------------------------உரைநடைத் தமிழ் 18-ஆம் நூற்றாண்டில் தோன்றவதற்குமுன்னர், பெரும்பாலான தமிழ்ப் படைப்புகள் (இலக்கியம், தத்துவம் உட்பட) செய்யுள்நடைகளில்தான் இருந்துவந்துள்ளன. செய்யுள் நடைகளில் யாப்பு இலக்கணம் பின்பற்றப்பட்டது. ஆகவே யாப்பை முறையாகப் பயன்படுத்தும்வகையில் - அசை, சீர், தளை ஆகியவை சரியாக இருக்கவேண்டும் என்ற நோக்கில் - சொற்கள் பல இடங்களில் இணைத்தும் பிரித்தும் பயன்படுத்தப்பட்டன. நிலைமொழிச்சொல்லின் ஒரு பகுதியானது வருமொழியின் முதல்பகுதியாக அமைவது உட்பட பல நுணுக்கங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் இன்றைய உரைநடைத் தமிழில் அவ்வாறு பயன்படுத்துவது மிகவும் குறைந்திருந்தாலும், முந்தைய பாதிப்புகள் இன்னும் நீடிக்கின்றன. இங்கு நான்...