கணினித் தமிழும் தமிழ்மொழிக் கல்வியும்
( 10 – ஆம் உலகத் தமிழாசிரியர் மாநாடு , மலேசியா )
மொழித்தொழில்நுட்பம் ( Language Technology)
சமூக
வாழ்க்கையில் நாம் நமது உணர்வுகளையும் கருத்துகளையும் தேவைகளையும் பிறர்க்குப் புலப்படுத்துவது
மிகத் தேவையான ஒன்றாகும். இந்தப் புலப்படுத்தச்
செயல்பாட்டின் ( Communication ) ஊடே நாம் வாழும் இயற்கையையும் சமூகத்தையும்
புரிந்துகொண்டு, நமக்குத் தேவையான வகையில் மாற்றி, பயன்படுத்திக்கொள்கிறோம்.
செயல்முனைப்புள்ள இக் கருத்துப் புலப்படுத்தச் செயல்பாடே கருத்தாடல்
( Discourse) என்றழைக்கப்படுகிறது.
நாம்
மேற்கொள்கிற கருத்தாடலில் மிகப் பெரிய பங்கு
ஆற்றுவது நமது இயற்கைமொழியே ஆகும். இயற்கைமொழியோடு
( Verbal ) நமது உடல்
அசைவுகள், முகத் தோற்றங்கள், சைகைகள்,
குறியீடுகள், படங்கள் போன்ற
மொழிசாராக் கூறுகளும் ( non-verbal...