திங்கள், 17 பிப்ரவரி, 2025

'விடு' என்னும் துணைவினைபற்றிய ஓர் உரையாடல் :

 'விடு' என்னும் துணைவினைபற்றிய ஓர் உரையாடல் :

----------------------------------------------------------------------
திரு. இராமகி ஐயா அவர்கள்:
----------------------------------------
”செய்தேன்” இருக்கச் ”செய்திட்டேன்” எதற்கு? அதுபோல் வந்தேன் இருக்க ”வந்திட்டேன்” எதற்கு? இடாமல் வினையில்லையா?
ந. தெய்வ சுந்தரம்
-----------------------------
'நான் வீட்டுக்கு வந்தேன்' - 'நான் வீட்டுக்கு வந்துவிட்டேன்'
'நான் அந்த வேலையைச் செய்தேன்' - 'நான் அந்த வேலையைச் செய்துவிட்டேன்'
'நான் அதைப் படித்துவிட்டேன். வேறு என்ன படிக்கவேண்டும்?'
இவ்விடத்தில் 'நான் அதைப் படித்தேன். வேறு என்ன படிக்கவேண்டும்?' என்று கூறமாட்டோம்.
- வேறுபாடு உண்டு.
இது தமிழில் உள்ள ஒரு வினைக்கூறு, முற்றுவினைக் கூறுபாடு (perfect aspects).
சில இடங்களில் 'ஆயிற்று' என்பதும் வரும்.
'அவன் வந்தாயிற்று'
'என்ன, இன்னும் நீ புறப்படவில்லையா'
'இதோ , புறப்பட்டுவிட்டேன்/ புறப்பட்டாயிற்று''
இது இன்றைய தமிழில் மிகவும் பயன்படும் ஒரு துணைவினை.
சமுதாயத் தேவைகள் மாற மாற, மொழியின் இலக்கணநுட்பங்களும் மாறும்; வளரும்.
இதற்கு இணையாக, 'இடு' என்னும் ஒரு துணைவினையும் உள்ளது.
'நீ அதைச் செய்திடு'
தமிழ் இலக்கியங்களிலும் இது இடம்பெற்றுள்ளது.
'அவன் அதைச் செய்திட்டான்'

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India