தமிழ்மொழிக்கல்விக்கு எப்போது உரிய மரியாதை கிடைக்கும்?
--------------------------------------------------------------------
தமிழ்மொழி, தமிழ்க்கல்வி, தமிழ்மாணவர், தமிழ் ஆசிரியர் . . . தமிழ்ச்சமுதாயத்தால் மதிக்கப்படவேண்டுமென்றால் . . . தமிழ்நாட்டின் பொருளாதார உற்பத்தியிலும் வணிகத்திலும், அவற்றின் பயனாக அரசு நிர்வாகத்திலும் தமிழுக்கு முறையான இடம் அளிக்கப்படவேண்டும். இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி தமிழுக்கு வந்துசேரவேண்டும். தமிழின் பணியும் பயன்பாடும் அறிவியல் தொழில்நுட்பத்திற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் சென்று சேரவேண்டும்.
இவை இல்லாமல் . . . வெறும் பரிசுகளும் விருதுகளும், பேருந்து இலவசப்பயணச்சீட்டுகளும், மாதந்தோறும் கருணைத்தொகையும், பெரிய அளவிலான மாநாடுகளும் , தமிழறிஞர்களுக்கான சிலைகளும் ஒருபோதும் தமிழுக்கு உரிய இடத்தைச் சமுதாயத்தில் தராது. இவையெல்லாம் குழந்தைகளுக்கு ஏதாவது மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவதாகவே அமையும். தமிழ்நாட்டில் அன்றிலிருந்து இன்றுவரை . . . ஆட்சியில் யார் இருந்தாலும் . . . இதுதான் நடந்துகொண்டிருக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக