தமிழர்களுக்கு ''லாலிபப்' மிட்டாய்!
----------------------------------------------------------------------
'தமிழ் உட்பட 22 மொழிகளையும் ஆட்சிமொழியாக்கு ' என்று தமிழ்நாட்டில் எழுப்பப்பட்ட கோரிக்கையை நீர்த்துப்போகவைக்க, நடுவண் அரசு செய்த காரியம், 'தமிழுக்குச் செம்மொழித் தகுதி தருகிறேன்; ஆண்டுக்குச் சில கோடிகள் தருகிறேன், எதையாவது செய்துகொள் ' என்று கூறிவிட்டது. இப்போது தமிழ்மட்டும் இல்லாமல் அநேக மொழிகளுக்குச் 'செம்மொழித்தகுதி' கொடுக்கப்பட்டுள்ளது. 'செம்மொழி' என்பதற்கான பொருளே 'காணாமல் போய்விட்டது'.
அடுத்து, இப்போது இன்னொன்றைச் செய்துவருகிறது.
'' இந்தி - 22 பிற மொழிகளுக்குச் செயற்கைச் செய்யறிவுத்திறன் மென்பொருள் உருவாக்குகிறோம். 100 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளோம்.
இனி. நீங்கள் தமிழில் நடுவண் அரசுக்குக் கடிதங்கள் அனுப்பலாம். நாங்கள் அதை இந்தியில் மொழிபெயர்த்துக் கொள்கிறோம். பதில்களை நாங்கள் இந்தியிலேயே எழுதுவோம். ஆனால் உங்கள் கைக்குத் தமிழிலேயே கிடைக்கும். எனவே, இனித் தமிழை ஆட்சிமொழி ஆக்குங்கள் என்ற கோரிக்கை தேவை இல்லை. ஆனால் இந்தி ஆட்சிமொழியாக நீடிக்கும்' - இதுதான் இன்றைய நிலை.
நடுவண் அரசின் ஆட்சிமொழிகளாக அனைத்து மொழிகளையும் ஆக்குவதே அடிப்படை ஐனநாயக உரிமையைத் தேசிய இனங்களுக்கு அளிப்பதாகும்.
அடுத்து, தமிழ் உட்பட அனைத்து இந்திய மொழிகளையும் பொருளாதார உற்பத்தி , தொழில்நுட்பம், வணிகம் ஆகியவற்றில் பயன்படுத்தும் நிலையைக் கொண்டுவரவேண்டும். அதற்கான திட்டமிட்ட பணிகள் அனைத்து மொழிகளுக்கும் விரிவுபடுத்தவேண்டும்.
இவ்விரண்டும் நிறைவேற்றப்பட்டாலே, நீதிமன்றமொழி, பயிற்றுமொழி, வழிபாட்டுமொழி என்று பல துறைகளிலிலும் அனைத்து மொழிகளுக்கும் உரிய , சமமான உரிமைகள் கிடைத்துவிடும்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக