தமிழ் படித்தவர்களுக்கு மட்டும்தானா அவலநிலை? என்ற தலைப்பில் நான் இட்ட ஒரு பதிவையொட்டிய ஒரு உரையாடல் . . .
-------------------------------------------------------------
திரு. வேந்தன் அரசு அவர்கள்
-----------------------------------------
ந. தெய்வ சுந்தரம்
--------------------------------------
நன்றி திரு. வேந்தன் அரசு ஐயா!. விடுதலைப்போராட்டம் இந்தியாவின் செல்வத்தைச் சுரண்டுகிற ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகத்தானே நடைபெற்றது? பொருளாதாரச் சுரண்டல்தானே அடிப்படை? அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கத்தானே 'சுதேசி இயக்கம்' தோற்றுவிக்கப்பட்டது? அவற்றில் ஒரு செயல்தானே வ உ சி தேசியக் கப்பல் நிறுவனம் உருவாக்கியது. ஆனால் தற்போது நாமே வலிய பன்னாட்டுநிறுவனங்களுக்கு 'இங்கு வந்து முதலீடு இட்டு, எங்கள் உழைப்புச்சக்தியைச் சுரண்டு ' என்று கேட்பது சரியா?
'சுதந்திரம்' அடைந்தபிறகு, உள்நாட்டுப் பொருளாதாரத்தின் அடிப்படையில் மூலதன வளர்ச்சி ஏற்பட்டு . . . தொழில் வளர்ச்சி ஏற்பட்டு . . . இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்திருக்கவேண்டுமல்லவா? அவ்வாறுதானே சீனம் வளர்ச்சி அடைந்துள்ளது. ஏன் இங்குமட்டும் அது நடக்கவில்லை?
அடுத்து, கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் 'இந்தியர்கள்' என்பதால் , அந்த நிறுவனங்கள் இந்திய நிறுவனங்கள் ஆகிவிடுமா? இந்தியர்களைச் சுரண்டும் நிறுவனங்களுக்கு 'இந்தியர்களே' துணையாக நிற்கிறார்கள் என்பது இந்தியாவுக்குப் பெருமையா? சிறுமையா?
0 கருத்துகள்:
கருத்துரையிடுக