தமிழகப் பள்ளிக் கல்வியில் மும்மொழிக்கொள்கையைத் திணிக்கும் நடுவண் அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கையை எதிர்ப்போம் !-------------------------------------------------------------------------தமிழ்நாடு அரசு தமிழகத்துப் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் . . . கல்வி முன்னேற்றத்திற்கான நிதி நல்குவோம் என்ற நடுவண் அரசின் மிரட்டலும் முடிவும் . . . முழுக்க முழுக்க ஒரு ஜனநாயகவிரோத முடிவு! தேசிய இனங்களின் உரிமைகளை மதிக்காத ஒரு முடிவு! வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டிய ஒரு முடிவு! பல்வேறு தேசிய இனங்களைக்கொண்ட ஒரு குடியரசு நாட்டில் , ஐனநாயக மொழிக்கொள்கையை நடைமுறைப்படுத்தாமல் இந்திமொழியைத் திணிக்கிற இந்த முடிவைக் கடுமையாக எதிர்க்கவேண்டும்! அதேவேளையில் தேசிய இனங்கள் தங்கள் தாய்மொழியையே முழுமையாக . . . கல்வி உட்பட - அனைத்துத்துறைகளிலும் தக்கவைக்கவேண்டும் ! தமிழகத்தில் ஆங்கிலம் உட்பட எந்தவொரு...
திங்கள், 17 பிப்ரவரி, 2025
நடுவண் பல்கலைக்கழகங்களில் ஆங்கிலமும் இந்தியும்! (2)
நடுவண் பல்கலைக்கழகங்களில் ஆங்கிலமும் இந்தியும்! பிற மொழிகளுக்கு இடம் கிடையாது ! என்பதுபற்றிய உரையாடலில் நண்பர் மாலனுக்கும் எனக்கும் இடையிலான உரையாடல்! (பகுதி 2) நண்பர் திரு மாலன் அவர்கள் ''பயணத்தில் இருந்ததால் உடனடியாக பதிலளிக்க முடியவில்லை. விமானத்திலிருந்து இறங்கியதும் இதை எழுதுகிறேன். தாமதத்திற்கு மன்னிக்க. ' என்று கூறி, எனது ஐயங்களுக்கு நேரம் ஒதுக்கிப் பதில் அளித்துள்ளார். அவருக்கு மிக்க நன்றி!-------------------------------------------------------------------------நண்பர் திரு மாலன் அவர்கள்---------------------------------------------------1.) ஓர் அரசு அதன் அலுவல் மொழியில் தன் அலுவல்களை நடத்துவது பிழையாகுமா?தமிழக அரசின் அலுவல் மொழி...
நடுவண் பல்கலைக்கழகங்களில் ஆங்கிலமும் இந்தியும்! பிற மொழிகளுக்கு இடம் கிடையாது ! (2)
நடுவண் பல்கலைக்கழகங்களில் ஆங்கிலமும் இந்தியும்! பிற மொழிகளுக்கு இடம் கிடையாது ! என்பதுபற்றிய உரையாடலில் நண்பர் மாலனுக்கும் எனக்கும் இடையிலான உரையாடல்! (பகுதி 1) -------------------------------------------------------------------ந. தெய்வ சுந்தரம்------------------------------நண்பர் மாலன் அவர்களே. பயிற்றுமொழிபற்றிய விவாதம் வேறு. அதுபற்றி நிறையவே நான் எழுதியுள்ளேன். நான் இந்தப் பதிவில் கேட்டுள்ளது . . நடுவண் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் விண்ணப்பப் படிவத்தில் , வகுப்பு நடத்துவதில் ஒருவருக்கு ஆங்கிலம் வசதியாக இருக்குமா, அல்லது இந்தி வசதியாக இருக்குமா? என்று கேட்டுள்ளது பற்றியே!இந்தியைமட்டும் ஏன் சிறப்பித்துக் கூறவேண்டும்? ஆங்கிலம் அல்லது ஆசிரியரின் தாய்மொழி, எது வசதியாக இருக்கவேண்டும் என்றல்லவா கேட்டிருக்கவேண்டும்? அவ்வாறு இல்லாமல், ஆங்கிலத்தோடு இந்தியைமட்டும் சேர்த்துள்ளார்களே? எதனால்?...
செயற்கைச் செய்யறிவுத்திறன் வளர்ச்சியும் சமுதாயப் பிரச்சினைகளும் . .
செயற்கைச் செய்யறிவுத்திறன் வளர்ச்சியும் சமுதாயப் பிரச்சினைகளும் . . . --------------------------------------------------------------------------அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு எதிராக நிற்கக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். சமுதாயத்தின் வளர்ச்சிக்கு உற்பத்திசக்திகள் வளரவேண்டும்; வளரத்தான் செய்யும். அதை யாராலும் தடுத்துநிறுத்தமுடியாது. தடுத்துநிறுத்தவும்கூடாது. செயற்கைச் செய்யறிவுத்திறன் வளர்ச்சி வரவேற்கப்படவேண்டியதே! அதில் ஐயமே வேண்டாம்! தற்போதைய சிக்கல் என்னவென்றால் . . . ஏகாதிபத்திய நாடுகளின் ஏகபோகப் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் இலாப விகிதத்தை அதிகரிப்பதற்காக இந்த அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்த முனைவதில்தான் சிக்கல்! சமுதாயத்தில் ஒரு அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியால் குறிப்பிட்ட துறைகளில் தேவையான தொழிலாளிகள் எண்ணிக்கை குறையலாம். ஆனால் அதேவேளையில் அவ்வாறு...
நடுவண் பல்கலைக்கழகங்களில் இந்திமொழி ஆதிக்கம் . . .
நடுவண் பல்கலைக்கழகங்களில் இந்திமொழி ஆதிக்கம் . . . ----------------------------------------------------------------------நடுவண் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர்கள் நியமனத்திற்கான விண்ணப்பப் படிவம் ஒன்றைப் பார்த்தேன். 'மாணவர்களுக்கு எந்த மொழியில் உங்களால் பாடத்தைக் கற்றுக்கொடுக்க வசதியாக இருக்கும்? (in which language you are comfortable to teach students?) மேற்கண்ட வினாவுக்குக் கீழே - 'ஆங்கிலம், இந்தி' - இந்த இரண்டில் ஒன்று! இந்த இரண்டில் ஒன்றைத்தான் ஒருவர் தேர்ந்தெடுக்கமுடியும். அப்படியென்றால் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் இந்தியில் வகுப்பு எடுக்கலாம். ஆங்கிலம் தேவை இல்லை! ஆனால் பிறமொழிகளில் வகுப்பு எடுக்கமுடியாது! ஒரு கட்டத்தில் தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்களைக்கூட இந்தியில்தான் கற்றுக்கொடுக்கவேண்டும் என்றுகூடக் கூறுவார்கள்! பிறமொழிக்காரர்கள் ஆங்கிலம் நன்கு தெரிந்திருக்கவேண்டும்....
வேலை இழப்பு (3)
நேற்று இன்ஃபோசிஸ் 400 பேரை வெளியேற்றியதையொட்டி நானும் நண்பர் மாலன் அவர்களும் எழுதிய உரையாடலின் தொடர்ச்சி இது . . . (பகுதி 3)----------------------------------------------------------------------- நண்பர் திரு மாலன் அவர்கள்------------------------------------------------அம்பானி அதானியைப் பற்றிப் பேசவில்லை உங்கள் குடும்பப் பின்னணி எனக்குத் தெரியாது. ஆனால் எத்தனையோ பேர் தங்கள் தந்தையர் வாழ்ந்ததை விடப் பொருளாதாரத்தில் மேம்பட்ட வாழவை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் தந்தை கிராமப்புற ப்ள்ளி ஆசிரியராக சில நூற் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்திருப்பார். அவர் மகன் பல்கலைக்கழகப் பேராசிரியரக, வங்கி அதிகாரியாக, ஏதோ ஒரு நிறுவன நிர்வாகியாக, மருத்துவராக, பொறியாளராக, கணக்கராக அவர் தந்தையை விட பல மடங்கு வருமானம் ஈட்டுபவராக இருப்பார். இவர்கள் யாரைச் சுரண்டி வளர்ந்தார்கள்? இந்தியா சோஷலிசக் கனவுகளில் மிதந்து கொண்டிருந்த...
வேலை இழப்பு (2)
நேற்று இன்ஃபோசிஸ் 400 பேரை வெளியேற்றியதையொட்டி நானும் நண்பர் மாலன் அவர்களும் எழுதிய உரையாடலின் தொடர்ச்சி இது . . . (பகுதி 2) ------------------------------------------------------------------------நண்பர் மாலன் அவர்கள்----------------------------------------------------------முடிவுக்கு வரச் சொல்லி வற்புறுத்தவில்லை. ஆனச்ல் மறு தரப்பு என்ன என்பதையும் அறிந்து கருத்துச் சொன்னால் அது ஏற்புடையதாக இருக்கும். நீங்கள் குறிப்பிட்ட நிறுவனம் 400 பேரை மட்டுதான் பயிற்சிக்கு எடுக்கிறதா? இல்லை அது பல்லச்யிரக்கணக்கானோரை எடுக்கிற்து. பயிற்சிக்கு எடுக்கப்பட்ட எல்லோரையும் வீட்டுக்கு அனுப்பி விட்டதா? இல்லை. அனுதாபங்களால் வறுமையை ஒழித்து விட முடியாது கல்வி, திறன்கள் இவற்றின் மூலமே முடியும் கல்வியின் மூலம் திறன்கள் மூலம் வறுமையிலிருந்து வெளியேறிய ஒரு தலைமுறை இங்கே இருக்கிறதல்லவா? பசிக்குக் காரணம் என்ன என்பதைக்...
வேலை இழப்பு ... இன்ஃபோசிஸ்
இருவேறு கண்ணோட்டங்கள் . . . நண்பர் மாலன் அவர்களும் நானும்! (பகுதி 1) ---------------------------------------------------------இன்ஃபோசிஸ் கணினி நிறுவனத்தில் ஒரே நேரத்தில் 400 இளம் பொறியாளர்கள் வேலை இழப்பு . . . பயிற்சியில் தேறவில்லை என்று ஒரேநாளில் இடத்தைக் காலிசெய்யுங்கள் என்று ஈவிரக்கமில்லாமல் இன்ஃபோசிஸ் நிறுவனம் கூறியுள்ளதாக ஒரு நாளிதழில் வெளிவந்த செய்தியை முகநூலில் பதிவிட்டேன். அது தொடர்பாக நண்பர் மாலன் அவர்கள் கருத்தும் அவரது கருத்தின்மீதான எனது கருத்தும் . . . நண்பர் மாலன் அவர்கள்---------------------------------------------------பயிற்சியில் தேறாத டிரெய்னீஸை என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள்?ந. தெய்வ சுந்தரம்----------------------------------------------------------ஒருவர் வறுமையின் விளைவாகப் பசியால் துடிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். ஒருவர் அதைப்பார்த்துவிட்டு' இது அவர் செய்த...
வேலையில்லாத் திண்டாட்டம் . ...
வினா ஒன்று (1)------------------------------------------------வேலையில்லாத் திண்டாட்டம் . ... பள்ளிக் கல்வி முடித்தவர்கள் . . . கலைக்கல்லூரி பட்டதாரிகளாக ஆனவர்கள் . . . பலவகைப் பொறியியல் படிப்புகளில் பட்டம் பெற்றவர்கள் . . . மருத்துவப் படிப்பு முடித்தவர்கள் . . . உடல் உழைப்பை மட்டுமே நம்பியிருக்கிற தொழிலாளிகள் . . . விவசாய உற்பத்தியில் பல்வேறு காரணங்களினால் வேலை இல்லாமல் இருக்கும் விவசாயிகள் . . . அல்லது வேறுவழியின்றிக் குறைந்த கூலியில் வேலைசெய்பவர்கள் . . . இதில் விட்டுப்போன பல இருக்கின்றன! இவர்களுக்கு வேலைவாய்ப்பு எவ்வாறு உருவாகும்?இவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உள்ள உத்தரவாதம் என்ன?ஒவ்வொரு துறையாகப் பார்க்கலாம்! குறைந்தது ஒரு லட்சம் மாணவர்கள் ஆண்டுதோறும் படிப்பு முடித்து வெளிவருகிறார்கள் ! இவர்களுக்கு வேலைவாய்ப்பு உண்டா? இல்லை என்றால் அதற்கு என்ன காரணம்? அதனடிப்படையில் ஆய்வுசெய்து...
எந்த அரசியல் கட்சி கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடை அளித்துள்ளது?
எந்த அரசியல் கட்சி கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடை அளித்துள்ளது? அல்லது 'தேர்தல் வியூகத் திறமைசாலிகளான'' பிரசாந்த் கிஷோர் போன்றவர்கள் விடை தருவார்களா? -------------------------------------------------------------------------1) 'சுதந்திரம்' பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் இந்தியாவால் ஏன் தன்னிறைவுப் பொருளாதார வளர்ச்சியைப் பெறமுடியவில்லை?2) கிராமப்புறங்களில் விவசாய நிலங்கள் ஏராளமாக இருந்தும், இன்னும் ஏன் விவசாய உற்பத்திமுறை நவீனமாக்கப்பட்டு, விவசாய உற்பத்தி வளரவில்லை?3) உள்நாட்டு மக்களுக்குத் தேவையான நுகர்பொருள் உற்பத்தியோ , அந்த உற்பத்திக்குத் தேவையான கனரகத் தொழிற்சாலைகளோ உள்நாட்டுப் மூலதனத்தைக்கொண்டு ஏன் வளரவில்லை? 4) கோடிக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு...
அந்நிய முதலீடு
இந்தியாவின் வளர்ச்சிக்குத் தேவையான உள்நாட்டு மூலதன வளர்ச்சிக்கு வழிவகுக்காத - அயல்நாட்டு மூலதனங்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கிற இந்தியாவில் உள்ள ஆளும், எதிர்க்கட்சிகள் பற்றிய எனது கருத்துக்கு நண்பர் திரு மாலன் அவர்கள் அளித்த பதிலும் அதற்கு எனது மறுபதிலும்! ''நீ ஏன் தவறு செய்கிறாய்' என்று கேட்டால், அதற்குரிய பதில் இல்லாமல் 'அவன்மட்டும் தவறு செய்யவில்லையா?' என்ற அடிப்படையில் அவரது பதில் அமைந்துள்ளது! நண்பர் திரு மாலன் அவர்கள்-------------------------------------சீனத்தில் அன்னிய முதலீடு இல்லையா? //Since 2021, China has attracted annually overseas investment of over 1 trillion yuan ($136.9 billion) for three consecutive years//https://www.morningstar.com/.../global-times-delving-the...ந....