எதிர்காலத்தில் மொழிபெயர்ப்புப் பணியில் மனித உழைப்பு தேவைப்படாதா? செய்யறிவுத் திறன் (AI) மென்பொருளே போதுமா?---------------------------------------------------------------------------------------------------------------------------செய்யறிவுத்திறன் மென்பொருள்களின் வளர்ச்சி . . . எதிர்காலத்தில் மனித மொழிபெயர்ப்புக்குத் தேவை இல்லாமல் ஆக்கிவிடும் என்ற ஒரு கருத்து சிலரிடம் நிலவுகிறது. ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை. மனிதர்களுக்குப் மொழிபெயர்ப்புப்பணியில் பல உதவிகளைச் செய்யறிவுத் திறன் மென்பொருள் உதவி செய்யலாம். பிற உற்பத்தித் துறைகள்போன்று . . . மனிதர்களும் கணினியும் இணைந்து மொழிபெயர்ப்புப் பணியை மிக வேகமாகவும் தரமாகவும் செய்யலாம். ஆனால் உறுதியாக மனிதர்களின் பணியே மொழிபெயர்ப்பின் இறுதி முழுமைக்கு அடிப்படையாக அமையும். இதை நான் கூறவில்லை; ChatGPT கூறுகிறது. ''While...