பாரதியும் இந்திய தேசிய விடுதலைப் போரும்
(ந. தெய்வ சுந்தரம்)
0. ஆங்கிலேய
ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இந்திய மக்களின்
தேசிய விடுதலைப்போரில் பாரதி ஆற்றிய பங்குபற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
0.1. இந்திய
தேசிய விடுதலைப்போர்குறித்துப் பாரதி
கூறியுள்ள கருத்துகளையும், அப்போரில்
பாரதியின் நேரடிப் பங்கையும் ஒருங்கே பார்த்து,
இறுதியில் பாரதியின் பங்கை வரையறுக்க இக்கட்டுரை முயலுகிறது.
0.2. பாரதியின்
பங்கைச் சரியாகப் புரிந்துகொண்டு மதிப்பிட, இந்திய தேசிய விடுதலைப்போரின் வரலாறு மிக அவசியமாக அமைகிறது. எனவே பாரதி காலம் வரை அமைந்த விடுதலைப்போரின் வரலாற்றைச் சுருக்கமாகக் கட்டுரையின் முதற்பகுதி கூறுகிறது. இரண்டாவது பகுதி பாரதியின் பங்கை அந்த வரலாற்றுச் சூழ்நிலையில்
இணைத்து மதிப்பிட முயலுகிறது.
1.0. ஆங்கிலேயக் காலனித்துவ ஆட்சி
நிறுவப்படுதல்
1.1. கி.பி.17- ஆம் நூற்றாண்டில்...