தமிழும்
தரவக மொழியியலும் (Tamil and Corpus Linguistics) (1)
-----------------------------------------------------------------------------------------------------------------------
அண்மையில்
சிங்கப்பூர் கல்வி அமைச்சின் எழுத்துத்தமிழ் தரவக மென்பொருள் ஒன்று 12- ஆம் உலகத்
தமிழாசிரியர்கள் மாநாட்டில் வெளியிடப்பட்டது. அதுபற்றி நான் முகநூல் பக்கத்தில்
எழுதியிருந்தேன். முகநூல் நண்பர்கள் சிலர் அதுபற்றிய மேலும் விவரங்கள் தர
இயலுமா என்று கேட்டுள்ளார்கள். அதனடிப்படையில் இச்சிறு குறிப்பை இங்குத்
தருகிறேன்.
மொழியியல்
ஆய்வில் பல கோணங்களில் மொழி ஆய்வு நடைபெற்றுவருகின்றன. ஆய்வாளர்களின் நோக்கங்களின்
அடிப்படையில் அவர்களுடைய ஆய்வுமுறைகளும் (schools of
thought) அமைகின்றன.
எடுத்துக்காட்டாக, மொழியியல்
பேரறிஞர் நோம் சாம்ஸ்கி பின்கண்ட வினாக்களை முன்வைக்கிறார். மனித இனத்திற்கே
சொந்தமான இயற்கைமொழி (species-specific)...