செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

பேராசிரியர் என். குமாரசாமி ராஜா

பேராசிரியர் என். குமாரசாமி ராஜா (1933 - ) ….. தமிழ் மொழியியல் உலகத்தில் யாராலும் மறக்கமுடியாத ஒரு பெரும் பேராசிரியர். திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணத்தில் அவர் பெயரிலேயே ஒரு மொழி விதி ( Post Nasal Voiceless Plosive) வழங்கிவருகிறது. 1969 ஆம் ஆண்டு வெளிவந்த அவரது இந்த ஆய்வுநூலுக்குத் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தின் தலைசிறந்த பேரறிஞர் எம் பி எமனோ அவர்கள் முன்னுரை அளித்துள்ளார். ராஜபாளையத்தில் பிறந்து வளர்ந்த பேராசிரியர் ராஜா அவர்கள், தமிழில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்று, பின்னர் பூனா டெக்கான் கல்லூரியில் மொழியியலிலும் முதுகலைப் பட்டம் பெற்றார். உலகறிந்த பேச்சொலியியல் பேராசிரியர் Peter Ladefoged அவர்களின் மாணவர். சில ஆண்டுகள் மதுரையில்...

சனி, 15 ஆகஸ்ட், 2020

தமிழ் மாணவர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்களுக்கு .... (3) மொழி வளர்ச்சியில் இரண்டு எதிர்மறையான நிகழ்வுகள்...

 தமிழ் மாணவர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்களுக்கு .... (3)மொழி வளர்ச்சியில் இரண்டு எதிர்மறையான நிகழ்வுகள்...----------------------------------------------------------------------------------------------------------------------------முந்தைய பதிவில் ''சொல்மயமாக்கம்'' பற்றிய சில கருத்துகளை முன்வைத்திருந்தேன். அதற்கு எதிர்மாறான ஒரு நிகழ்வு மொழிகளில் நடைபெறுகிறது. அது ''இலக்கணமயமாக்கம்'' என்று அழைக்கப்படுகிறது. தமிழ்மொழியில் இந்த நிகழ்வு வரலாற்றில் தொடர்ந்து நடைபெற்றுள்ளது.மொழி வளர்ச்சியில் சொற்களஞ்சியத்தின் பெருக்கம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அந்த அளவுக்கு இலக்கணப் பொருண்மையின்... இலக்கணச்சொற்கள் அல்லது விகுதிகளின் ... வளர்ச்சியும் முக்கியத்துவம் உடையது ஆகும். ''நான் அவரைக் கடையில் பார்த்தேன்'' என்ற தொடரில், நான்கு அகராதிச்சொற்கள் ( நான், அவர், கடை, பார் ) இடம்பெற்றிருக்கின்றன....

வியாழன், 13 ஆகஸ்ட், 2020

தமிழ் மாணவர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்களுக்கு .... (2) மொழி வளர்ச்சியில் இரண்டு எதிர்மறையான நிகழ்வுகள்...

 தமிழ் மாணவர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்களுக்கு .... (2)மொழி வளர்ச்சியில் இரண்டு எதிர்மறையான நிகழ்வுகள்...-------------------------------------------------------------------------உலகில் நிலவும் அனைத்தும் மாற்றங்களுக்கும் வளர்ச்சிகளுக்கும் உட்பட்டவையே. இயற்கை, சமுதாயம், மனித மனம் அல்லது அறிவு ஆகிய அனைத்தும் மாற்றங்களுக்கும் வளர்ச்சிகளுக்கும் உட்பட்டவையே. சமுதாய விளைபொருளான மொழியும் இதற்கு விதிவிலக்கு இல்லை. ஒரு குறிப்பிட்ட மொழி, தான் பயன்படுத்தப்படும் சமுதாயத்தின் வளர்ச்சிக்கேற்ப... தேவைகளுக்கேற்ப.... தொடர்ந்து மாறிக்கொண்டும் வளர்ந்துகொண்டும் இருக்கும்.தமிழ்மொழியும் மேற்குறிப்பிட்ட மாற்றங்களுக்கும் வளர்ச்சிகளுக்கும் உட்பட்டதே. இதில் குறிப்பிடத்தக்க இரண்டு நிகழ்வுகளைப்பற்றி இங்குக் குறிப்பிடுகிறேன். அவை 'சொல்மயமாக்கம் (Lexicalization) ' ' இலக்கணமயமாக்கம் (Grammaticalization)...

'' உயர்ந்த மனிதன் '' ''பழுத்த பழம்'' - ஒரு விளக்கம்!

 ''உயர்ந்த மனிதன்'' ''பழுத்த பழம்'' ''சிறந்த மனிதர் '' ஆகியவற்றில் '' உயர்ந்த, பழுத்த, சிறந்த '' என்பவை இறந்தகாலப் பெயரெச்சங்களா அல்லது பெயரடைகளா?'' - பேரா. ச. அகத்தியலிங்கம், பேரா. பொற்கோ ஆகியோரின் விளக்கம்! தமிழ் மாணவர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் கவனத்திற்கு! -----------------------------------------------------------------------------------------------------'' கெட்ட, உயர்ந்த, சிறந்த முதலான கிளவிகள் இறந்தகாலப் பெயரெச்ச வடிவத்தைப் பெற்றுத் திகழுகின்றன. ஆனால் இவை உள்ளபடியே இறந்தகாலப்பெயரெச்சங்களாகச் செயல்படவில்லை. உயர்ந்த குணம் என்பதிலுள்ள உயர்ந்த என்பது இறந்தகாலப் பெயரெச்சமாக இருந்தால், அதற்குரிய எதிர்மறை உயராத குணம் என்று அமையவேண்டும். ஆனால் அப்படியில்லாமல் உயர்ந்த குணம் என்பதற்கு எதிர்மறையாக நாம் தாழ்ந்த குணம் அல்லது இழிந்த குணம் என்ற தொடரையே காண்கிறோம். இங்கே உயர்ந்த...

திங்கள், 3 ஆகஸ்ட், 2020

தாய்மொழிக்கொள்கையின் அடிப்படைகள்...

தாய்மொழிக்கொள்கையின் அடிப்படைகள்...--------------------------------------------------------------------------முதலாவதாக, தமிழ்நாட்டில் கல்வித்துறையில் அனைத்து நிலைகளிலும் பயிற்றுமொழியாகவும் , வணிகம் உட்பட அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்தமொழியாகவும் , தமிழ்நாடு அரசின் அலுலகங்களின் அனைத்துச் செயல்பாடுகளிலும் பயன்படுத்துகிற மொழியாகவும் தமிழே இருக்கவேண்டும். இரண்டாவதாக, நடுவண் அரசின் ஆட்சி அல்லது அலுவலகமொழியாக இந்தி மட்டுமல்லாமல், தமிழ் உட்பட அரசியல் சட்டத்தில் 8-ஆவது பின்னிணைப்பில் உள்ள 22 மொழிகளும் நீடிக்கவேண்டும். இந்த இரண்டும் தமிழ் மக்களுக்கு அளிக்கப்பட்டுவிட்டால், பிறமொழிகள்பற்றிய அச்சம் யாருக்கும் உருவாகாது. மூன்றாவதாக, நமது கல்விமுறை, பாடத்திட்டம் அனைத்தும் பன்னாட்டு நிறுவங்களுக்கான பணியாளர்களை உருவாக்கும் வழிமுறையாகவே நீடிக்கிறது. எனவேதான் ஆங்கிலம் இல்லையென்றால், நமக்கு வேலையே இல்லை, வாழ்க்கையே...

தேசிய இனங்களின் உரிமையும் மொழி ஜனநாயகமும். (2) .

தேசிய இனங்களின் உரிமையும் மொழி ஜனநாயகமும். (2) ..-------------------------------------------------------------------------மொழித்திணிப்பு... மொழி ஆதிக்கம் ... என்பவற்றைத் தற்போதைய சூழலில் இரண்டாக வேறுபடுத்திப் பார்க்கவேண்டியுள்ளது. நடுவண் அரசு நம்மீது இந்தியைத் திணிப்பது வேறு ! நாமே நம்மீது ஆங்கிலத்தைத் ''திணித்துக்கொள்வது '' வேறு! தாய்மொழி உணர்வுடைய- மொழி ஜனநாயக உணர்வுடைய - ஒருவருக்கு இந்த இரண்டுமே தவறுதான். தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களில் தாய்மொழியாகிய தமிழில் கையொப்பம் இடுவதற்குக்கூட அரசு ஆணையும், தண்டனையும் தேவைப்படுகிற ஒரு சூழல். பள்ளிகளில் ஆங்கிலப்பயிற்றுமொழியை நாமே விரும்பி ஏற்றுக்கொள்கிறோம். தமிழ்வழிக் கல்வி நீடிக்கிற பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவதால், பள்ளிகளை மூட வேண்டியுள்ளது அல்லது ''ஆங்கிலப் பயிற்றுமொழிப் பள்ளியாக '' மாற்றவேண்டியுள்ளது. நடுத்தர வர்க்கக் குடும்பங்களில் தங்கள்...

தேசிய இனங்களின் உரிமையும் மொழி ஜனநாயகமும் .(1)

தேசிய இனங்களின் உரிமையும் மொழி ஜனநாயகமும் .(1)---------------------------------------------------------------------- ------------------------------------தொன்மை, தொடர்ச்சி, வளர்ச்சி உள்ள நமது தாய்மொழி தமிழ்மொழியின் சிறப்புபற்றி மகிழ்வடைவோம். அதனை இன்றைய தேவைக்கேற்பவும் அறிவியல் உலகிற்கு ஏற்பவும் அடுத்த உயர்கட்ட நிலைக்குக் கொண்டுசெல்வோம். அதுவே நமது இலக்காக இருக்கவேண்டும். அதற்கான பணிகளை மேற்கொள்வோம்.உலகில் உள்ள மொழிகள் அனைத்தும் மனித மூளையின் படைப்புகளே. ஒவ்வொரு மொழியும் அது பேசப்படுகிற மக்களுக்குச் சிறப்பானதே. ஆனால் அரசியல், பொருளாதாரக் காரணங்களின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட மொழி பிறமொழிகளின்மீது ஆதிக்கம் செலுத்தலாம். பிற இனங்களின்மீது ஆதிக்கம் செலுத்தலாம். ஆனால் அதற்குக் காரணம் அந்த மொழி இல்லை. அதைப் பிறமொழியினரின்மீது திணிக்க... ஆதிக்கம் செலுத்த முயலும் அரசியல் சக்திகளே . அந்த மொழியோ...

முதுபெரும் பேராசிரியர் செ.வை. சண்முகம் அவர்களின் முக்கிய நூல்கள்.

முதுபெரும் பேராசிரியர் செ.வை. சண்முகம் அவர்களின் தமிழ் மொழி ஆய்வாளர்களுக்கான ஐந்து முக்கிய நூல்கள் ...---------------------------------------------------------------------------------------------------------------பேராசிரியர் செ.வை. சண்முகம் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையிலும் மொழியியல் துறையிலும் 37 ஆண்டுகள் பணியாற்றியவர். அங்கேயே மூன்று ஆண்டுகள் மாணவராகவும் இருந்தவர். எங்களுடைய மொழியியல் பேராசிரியர். மறைந்த பேராசிரியர் ச. அகத்தியலிங்கம் அவர்களின் உற்ற நண்பர். பேராசிரியர் தமிழ் இலக்கணங்களில் ஆழ்ந்த புலமை பெற்றவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. 80 வயதைக் கடந்தும் இன்றும் தன்னுடைய ஒவ்வொரு நொடியையும் மொழி ஆய்வுக்காகவே செலவழித்துவருபவர்....

தொல்காப்பியம் வடமொழி இலக்கணங்களின் தழுவலா ? இல்லை!

தொல்காப்பியம் வடமொழி இலக்கணங்களின் தழுவலா ? இல்லை என்பதைத் தனது ஒன்பது கட்டுரைகள் வாயிலாகப் பேராசிரியர் க. பாலசுப்பிரமணியன் அவர்கள் நிறுவியுள்ளார். --------------------------------------------------------------------------'' மேனாட்டு இலக்கண மரபு, மேனாட்டினரால் மிகச் சிறந்ததாக மதிக்கப்படும் வடமொழி இலக்கண மரபு, இன்று அறிவியல் அடிப்படையில் மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் மொழியியல் கொள்கைகள் ஆகியவற்றின் பின்னணியில் தமிழ் இலக்கண மரபை மதிப்பிடும்போது அதன் பெருமையும் சிறப்பும் நுண்மையும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. தமிழ் மரபு, மேனாட்டு வடமொழி இலக்கண மரபுகளுடன் மேலெழுந்த வாரியாக நோக்கினால் சிற்சில ஒற்றுமைகளைக் கொண்டிருப்பினும் அடிப்படையில் அவற்றினின்றும்...

தமிழ்மொழி ஆய்வில் ஒரு முக்கியமான ஆய்வியல் கோட்பாடு...

தமிழ்மொழியின் வரலாற்று வளர்ச்சி ஆய்வில் மனதில் கொள்ளவேண்டிய ஒரு முக்கியமான ஆய்வியல் கோட்பாடு......-------------------------------------------------------------------------------------------------------------ஆங்கிலத்தில் கணிதத்தில் நிலவுகிற Variable என்ற சொல்லுக்கு ( constant என்பதற்கு எதிரான ஒரு சொல்) நிகரான சொல்லாக ''மாறி '' என்பதற்குப் பதிலாக ''வேறி'' என்ற ஒரு சொல்லைப் பயன்படுத்துவது பொருத்தமாக இருக்கலாம் என்ற இராமகி ஐயா அவர்களின் கருத்தையொட்டிய ஒரு கருத்தாடல்.... // இதுபோல் வேறு-தல், வேற்று-தல் என்ற வினைச்சொற்கள் ஏன் இருக்கக் கூடாது? நமக்குக் கிடைத்த ஆவணங்களையும், பேச்சுவழக்கையும் வைத்து அகரமுதலிகள் ஏற்பட்டன. ”அவற்றில் எல்லாமே இருக்கும்,...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India