...
புதன், 26 அக்டோபர், 2016
21 ஆம் நூற்றாண்டில் தமிழ்க்கல்வி பயிற்றல் நோக்கமும் பயிற்றல்முறையும்

200 ஆம் ஆண்டு தமிழ்க்கல்விக் கொண்டாட்டம்
பன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாடு 2016
--------------------------------------------------
21 ஆம் நூற்றாண்டில் தமிழ்க்கல்வி
பயிற்றல் நோக்கமும் பயிற்றல்முறையும்
( பேரா. ந. தெய்வ சுந்தரம், இந்தியா)
முன்னுரை:
தொன்மையும் தொடர்ச்சியும் வளர்ச்சியும் உடைய தமிழ்மொழியானது தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்
ஆகிய நாடுகளில் தாய்மொழியாக, முதல்மொழியாகக்
கற்றுக்கொடுக்கப்பட்டுவருகிறது. தற்போது மொரீஷியஸ், பிஜி போன்ற நாடுகளிலும் அங்கு வாழும் தமிழர்கள் தமிழ்க் கல்விக்கு முக்கியத்துவம்
அளித்துவருகின்றனர். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலும்
புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழைக் கற்பிக்கப் பல்வேறு...