தாய்மொழிக்கொள்கையின் அடிப்படைகள்...
--------------------------------------------------------------------------
முதலாவதாக, தமிழ்நாட்டில் கல்வித்துறையில் அனைத்து நிலைகளிலும் பயிற்றுமொழியாகவும் , வணிகம் உட்பட அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்தமொழியாகவும் , தமிழ்நாடு அரசின் அலுலகங்களின் அனைத்துச் செயல்பாடுகளிலும் பயன்படுத்துகிற மொழியாகவும் தமிழே இருக்கவேண்டும்.
இரண்டாவதாக, நடுவண் அரசின் ஆட்சி அல்லது அலுவலகமொழியாக இந்தி மட்டுமல்லாமல், தமிழ் உட்பட அரசியல் சட்டத்தில் 8-ஆவது பின்னிணைப்பில் உள்ள 22 மொழிகளும் நீடிக்கவேண்டும். இந்த இரண்டும் தமிழ் மக்களுக்கு அளிக்கப்பட்டுவிட்டால், பிறமொழிகள்பற்றிய அச்சம் யாருக்கும் உருவாகாது.
மூன்றாவதாக, நமது கல்விமுறை, பாடத்திட்டம் அனைத்தும் பன்னாட்டு நிறுவங்களுக்கான பணியாளர்களை உருவாக்கும் வழிமுறையாகவே நீடிக்கிறது. எனவேதான் ஆங்கிலம் இல்லையென்றால், நமக்கு வேலையே இல்லை, வாழ்க்கையே இல்லை என்ற ஒரு மாயை இங்கு உருவாக்கப்பட்டுள்ளது. உள்நாட்டுப் பொருளாதாரத்தை வளர்க்கும் நோக்கம் இருந்தால்தான், உள்நாட்டு மொழிகளின் முக்கியத்துவம் அதிகரிக்கும்; தேவையற்ற ஆங்கிலமோகம் நீடிக்காது.
எனவே, மொழிக்கொள்கையை வெறும் பயிற்றுமொழி, கல்விமொழிக் கொள்கையாக மட்டும் பார்க்கக்கூடாது. நாட்டின் அரசியல் பொருளாதாரத்தோடு இணைந்த ஒன்றாகத்தான் பார்க்கவேண்டும். இவற்றையெல்லாம் ஒழுங்குபடுத்தினால், தமிழகத்தில் தேவைப்பட்டால் ஆங்கிலம் உட்பட எந்த ஒரு பிறமொழியையும் படிப்பதில் யாருக்கும் அச்சம் ஏற்படாது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக