கொரோனாவும் மக்களுடைய பொருளாதார
நெருக்கடியும்.....
-------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்று காலையில் பாலிமர் தொலைக்காட்சியில் ஒரு தகவல்
அளிக்கப்பட்டது. வாடகைக்கு குடியிருப்பாளர்கள் கிடைக்கவில்லை என்று ஒரு வீட்டு
உரிமையாளர் அதில் கூறினார். வாடகையை நம்பித்தான் தன் வீட்டார் நம்பியிருப்பதாகவும்
கூறினார். அதற்குக் கூறப்பட்ட காரணம்... லட்சக்கணக்கான மக்கள் சென்னையை விட்டு
நீங்கி... வெளியூர்களுக்கு , குறிப்பாகத்
தங்கள் கிராமங்களுக்குச் சென்றுவிட்டார்கள் என்பதாகும்.
\
இங்கு நமக்கு இரண்டு ஐயங்கள் .....ஏன் அவ்வாறு
சென்னையைவிட்டுச் சொந்தக் கிராமங்களுக்குச் செல்கிறார்கள்? அடுத்து, அப்படியென்றால், சென்னையில்
தற்போது உள்ள மக்கள் அனைவருக்கும் வீட்டுவசதி இருக்கிறதா? இல்லை
என்பதே விடை! சற்று வசதியான வாடகை வீடுகளில்...
சனி, 27 ஜூன், 2020
பேராசிரியர் முனைவர் தங்க மணியன்
9:47 AM
ந.தெய்வ சுந்தரம்
No comments
பேராசிரியர் தங்க மணியன் ..... 47 ஆண்டுகால நட்பு எங்களிடையே! அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் அருமையான வார்ப்பு. ஏறத்தாழ 30 ஆண்டுகாலம் மைசூர் பல்கலைக்கழகத்தில் மொழியியல், தமிழ்ப் பேராசிரியர். கன்னடத்திலும் மிகத் திறமை பெற்றவர். தற்போது சென்னையில் வசித்துவருகிறார்.
பேராசிரியர் முனைவர் தங்க மணியன் .... எனது இணைபிரியா ஆயுட்கால நண்பர்! அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேரா. இராமசாமிப்பிள்ளை, பேரா. வ.சுப. மாணிக்கம் ஆகியோரிடம் இளங்கலை , முதுகலை தமிழ் பயின்றவர். பேரா. அகத்தியலிங்கம் அவர்களின் மொழியியல்துறை மாணவர்! பேர. பொற்கோ அவர்களிடம் ( உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் , சென்னை) முழுநேர ஆய்வாளர் என்ற முறையில் முனைவர் பட்டம்பெற்ற முதல் மாணவர். நானும்...
பேராசிரியர் எஸ். இராஜேந்திரன்
9:44 AM
ந.தெய்வ சுந்தரம்
No comments
பேராசிரியர் ச. இராஜேந்திரன். தமிழகத்தின் மூத்த கணினிமொழியியல் பேராசிரியர். கடந்த 30 ஆண்டுகளுக்குமேலாக இத்தளத்தில் மிகப்பெரிய உழைப்பை நல்கி வருபவர். அமைதியாக ஆனால் மிக ஆழமாகத் தனது ஆய்வைத் தொடர்ந்துவருபவர். அவர் பணி மேலும் சிறக்க எனது வாழ்த்துகள்.
தமிழறிஞர்கள்பற்றி (60)
பேராசிரியர் எஸ். இராஜேந்திரன் (1950) … எனது தொடரில் நான்காம் தலைமுறை – எனது தலைமுறையைச் சேர்ந்த மொழியியல் பேராசிரியர். தமிழகத்தில் இன்று தமிழ்க் கணினிமொழியியல் துறையில் குறிப்பிடத்தக்க ஒரு சிலரில் ஒருவர். நாகர்கோவிலைச் சேர்ந்தவர். வேதியியலில் இளங்கலைப் பட்டம் (1971) பெற்றபிறகு, கேரளப் பல்கலைக்கழகத்தில் மொழியியலில் முதுகலைப்பட்டமும் (1971), பூனா பல்கலைக்கழகத்தில்...
பேராசிரியை வி. தனலட்சுமி
9:43 AM
ந.தெய்வ சுந்தரம்
No comments
அன்புத்தோழியர் பேரா. வி. தனலட்சுமி அவர்களைப்பற்றி நான் 5 ஆண்டுகளுக்குமுன் முகநூலில் இட்ட பதிவை மீண்டும் பதிவிடுவதில் மிக்க மகிழ்வடைகிறேன். சில ஆண்டுகளுக்குமுன் சென்னையில் உள்ள தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் துணை இயக்குநராகவும் பணியாற்றினார். தற்போது இவர் தமிழ்நாடு அரசுக் கல்லூரியில் (கிருஷ்ணகிரி) பணியாற்றுகிறார். கணினித்தமிழில் ஆர்வம்கொண்டு... அத்துறையில் தொடர்ந்து பணியாற்ற விரும்பும் இவருக்கு அதற்கான நிறுவனங்களில் பணிவாய்ப்பு கிடைத்தால். உண்மையில் கணினித்தமிழ் வளர்ச்சிக்கு நிச்சயம் தன்னால் இயன்ற பணிகளைத் தொடரலாம். அந்த வாய்ப்பு விரைவாகக கிடைக்க எனது வாழ்த்துகள்.
தமிழறிஞர்கள்பற்றி (59) :
பேராசிரியை வி. தனலட்சுமி (1975) … எனது தொடரில்...
செவ்வாய், 23 ஜூன், 2020
பேராசிரியர் க.ப. அறவாணன்
10:59 PM
ந.தெய்வ சுந்தரம்
No comments
பேராசிரியர் க.ப. அறவாணன் (1941) … தமிழுலகம் நன்கு அறிந்த ஆய்வாளர். இலக்கியம், மொழி, மானுடவியல், வரலாறு என்று பல துறை அறிவுகளைக் கொண்ட தனிச் சிறப்பு வாய்ந்த ஒரு பேராசிரியர். நெல்லை மாவட்டத்தில் கடலங்குடி என்ற ஊரில் பிறந்தவர். தமிழில் பி ஓ எல், எம்.ஏ., எம்.லிட்., முனைவர் ஆகிய பட்டங்களையும் மானுடவியல் போன்ற பிற துறைகளில் பட்டயங்களையும் பெற்றவர். கேரளப் பல்கலைக் கழகத்தில் முதுகலைத் தமிழ் படிக்கும்போது, பெரும் பேராசிரியர் வி.அய். சுப்பிரமணியம் அவர்களுக்கு மிகவும் பிடித்த மாணவரானார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.லிட். பட்டத்திற்காக இவர் நன்னூல்பற்றி ஆய்வு மேற்கொண்டார். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் பகுதிநேர ஆய்வாக, தொல்காப்பிய உரையாசிரியர்...
பேராசிரியை வி. ரேணுகா தேவி
10:55 PM
ந.தெய்வ சுந்தரம்
No comments
பேராசிரியை வி. ரேணுகா தேவி (1954) … தமிழகத்தில் மொழியியல் துறையில் சிறந்து விளங்குகிற பெண் மொழியியலார்களில் ஒருவர். மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையிலேயே பயின்று , அங்கேயே விரிவுரையாளர், இணைப் பேராசிரியர், பேராசிரியர், துறைத்தலைவர் , புலத்தலைவர் என்று பல பணிகளை மேற்கொண்டு, தற்போது பணி ஓய்வு பெறும் நிலையில் உள்ளார். இளங்கலையில் வேதியியல் கல்வி பெற்ற இவர், முதுகலையில் மொழியியல் துறையைத் தேர்ந்தெடுத்தார். தமிழிலும் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். 1987-90 ஆம் ஆண்டுகளில் மதுரையில் உள்ள இந்திய ஆய்வியலுக்கான அமெரிக்க நிறுவனத்தில் ( American Institute of Indian Studies) தமிழ்மொழி பயிற்றுநராகப் பணியாற்றினார். ஆங்கிலம், தமிழ் இரண்டின்...
பேராசிரியர் ஆ. சிவலிங்கனார் ( 1922 - 2014)
10:52 PM
ந.தெய்வ சுந்தரம்
No comments
பேராசிரியர் ஆ. சிவலிங்கனார் ( 1922 - 2014) … தமிழுலகத்தில் எதிர்பார்ப்பு இல்லாமல், தமிழ்ப்பணி மேற்கொண்ட ஒரு தமிழ்ப் பேராசிரியர், ஆய்வாளர். தொல்காப்பியத்திலும் அதற்கான அனைத்து உரைகளிலும் ஆழமாக மூழ்கி எழுந்தவர். பள்ளிப் படிப்புக்குப் பின்னர், கடலூர் ஞானியார் மடத்தில் தமிழ் இலக்கியம், இலக்கணங்களில் பயிற்சிபெற்றார். திருவையாறு அரசர் கல்லூரியில் தமிழ் பயின்றார். சிறிதுகாலம் நெல்லை மாவட்ட வீரவநல்லூரில் (நானும் அங்கு படித்துள்ளேன் என்பதில் மகிழ்ச்சி) பள்ளி ஒன்றில் (1941) பணியாற்றினார். பின்னர் மயிலம் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்க் கல்லூரியில் (1942) விரிவுரையாளராக இணைந்தார். அக்கல்லூரியிலேயே தொடர்ந்து பணியாற்றி, முதல்வராகவும் பதவி உயர்வுபெற்று, 1972...
சனி, 20 ஜூன், 2020
பேராசிரியர் மறைமலை இலக்குவனார்
11:03 PM
ந.தெய்வ சுந்தரம்
No comments
பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்கள்.... 74 வயது இளைஞர்... தமிழாகவே வாழ்ந்த பேராசிரியர் இலக்குவனார் அவர்களின் தமிழ் மகன்... ஆய்வுலகிற்கு அறிமுகம் தேவையில்லாதவர்... மிகச் சிறந்த இலக்கியத் திறனாய்வாளர்... கவிஞர்... மொழிபெயர்ப்பாளர்... அமைதியான தமிழ்ப் பேராசிரியர்... தமிழ் இனம், தமிழ்மொழி என்று இன உணர்வோடும் தாய்மொழி உணர்வோடும் அன்றும் இன்றும் வாழ்ந்து வருபவர்... அவரைப்பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தை இன்றைய இளம் தமிழ் ஆய்வாளர்களுக்காக நான் ஐந்து ஆண்டுகளுக்குமுன்பு பதிவிட்ட முகநூல் பதிவை மீண்டும் இன்று மீள்பதிவு செய்வதில் மகிழ்வடைகிறேன். அவருக்கு என்னுடைய வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
பேராசிரியர் மறைமலை இலக்குவனார் (1946) … தமிழாய்வுலகில் நன்கு...
வெள்ளி, 19 ஜூன், 2020
பேராசிரியர் சு. சண்முக சுந்தரம்
9:08 PM
ந.தெய்வ சுந்தரம்
No comments
பேராசிரியர் சு. சண்முக சுந்தரம் (1949) … தமிழகத்தின் நாட்டுப்புறவியல் ஆய்வில் மிகவும் மூத்தவர். நெல்லை மாவட்டத்தில் கால்கரை என்ற ஊரில் பிறந்தவர். பாளை தூய சவேரியர் கல்லூரியில் தமிழ் இளங்கலைப் பட்டமும் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் முதுகைலப் பட்டமும் பெற்றவர். பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் பேராசிரியர் ந. சஞ்சீவி அவர்களின் வழிகாட்டுதலில் ‘ திருநெல்வேலி மாவட்ட நாட்டுப்புறப் பாடல்களில் சமுதாய அமைப்பு’ என்ற தலைப்பில் முனைவர் பட்டம் (1977) பெற்றவர் ( அப்போது நானும் அங்கே முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டிருந்தேன்). அடுத்த ஆண்டே அவர் பெங்களூர் தூய வளனார் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியில் இணைந்தார். தமிழகத்தில் அவருக்கு...
பேராசிரியர் ரா. வேல்முருகன்
9:04 PM
ந.தெய்வ சுந்தரம்
No comments
பேரா. ரா. வேல்முருகன் இன்று நம்மிடையே இல்லை. தமிழகத்தைச் சேர்ந்த இவர் சிங்கப்பூரில் பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பணியாற்றியவர். எப்போதும் சிரித்த முகம். சில ஆண்டுகளுக்கு முன் மறைந்தார்
பேராசிரியர் ரா. வேல்முருகன் … தமிழகத்தின் உருவாக்கம் … தற்போது சிங்கப்பூரில் தமிழ்ப்பணி. தமிழில் இளங்கலைப் பட்டம் (1978) பெற்றபிறகு, மொழியியல் துறையில் நாட்டம்கொண்டு, மதுரைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் (1980) பெற்றார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியலில் மேலாய்வு செய்வதற்கான வாய்ப்பைப் பெற்று, 1981-85 – இல் முழுநேர ஆய்வாளராகப் பணிமேற்கொண்டார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறையில் இணைப் பேராசிரியராக 15 ஆண்டுகள் பணியாற்றினார்....
செவ்வாய், 16 ஜூன், 2020
பேராசிரியர் அ.கி. பரந்தாமனார் (1902-1986)
8:26 AM
ந.தெய்வ சுந்தரம்
No comments
பேராசிரியர் அ.கி. பரந்தாமனார் (1902-1986) … ‘பயன்பாட்டுத் தமிழ் வளர்த்த பாவலர்’, ‘பல்துறை வித்தகர்’, ‘பைந்தமிழ்ப் பாவலர்’ என்று தமிழுலகம் பாராட்டும் பேராசிரியர். சென்னையில் பள்ளிப் படிப்பை முடித்த பேராசிரியர், பின்னர் தான் கற்ற பள்ளியிலேயே 23 ½ ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றினார். மேற்படிப்பில் ஆர்வம் கொண்டு, பணி விடுப்பு எடுத்து, சென்னைப் பச்சையப்பான் கல்லூரியில் இடைக்கலை ( F.A) , இளங்கலை படிப்புகளை மேற்கொண்டார். 1949 ஆம் ஆண்டில் தனது 47 –ஆம் வயதில் தமிழ் முதுகலைப் பட்டத்தைப் பெற்றார். 1950 ஆம் ஆண்டுமுதல் மதுரைத் தியாகராசர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியில் இணைந்தார். 1962 – இல் மதுரை திருவள்ளுவர் கழகத்தினர் பேராசிரியருக்கு மணிவிழா...
திங்கள், 15 ஜூன், 2020
பேரா. பெரு. பெருமாள்சாமி
9:00 AM
ந.தெய்வ சுந்தரம்
No comments
பேராசிரியர் பெரு. பெருமாள்சாமி அவர்கள்.......
-------------------------------------------------------------------------------------
பேரா. பெரு. பெருமாள்சாமி அவர்கள் மைசூரில் அமைந்துள்ள இந்தியமொழிகள் நடுவண் நிறுவனத்தில் தற்போது பேராசிரியராகவும் துணை இயக்குநராகவும் பணியாற்றும் மொழியியல், தமிழ்மொழி அறிஞர். தமிழகத்தில் திண்டுக்கல் நகரில் பிறந்த இவர், காந்திகிராமம் கிராமியப் பல்கலைக் கழகத்தில் இயற்பியலில் இளங்கலைப்பட்டம் பெற்றபிறகு, மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தில் மொழியியலில் முதுகலைப் பட்டம் பெற்று, பின்னர் கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டத்தைப் பெற்றார்.
இவருடைய முனைவர் பட்ட ஆய்வானது தமிழ்மொழிக் கருத்தாடல் ஆய்வில் மிக முக்கியமான...
பேராசிரியர் ‘மொழிஞாயிறு’ தேவநேயப் பாவாணர் ( 1902 – 81)
8:58 AM
ந.தெய்வ சுந்தரம்
No comments
பேராசிரியர் ‘மொழிஞாயிறு’ தேவநேயப் பாவாணர் ( 1902 – 81) … தமிழ் , தமிழர் பற்றிய ஆய்வுகளில் தனது முடிவுகளில் தெளிவாகவும் உறுதியாகவும் நின்ற ஒரு மிகப் பெரிய ஆய்வாளர். தமிழ் ஒரு இயற்கைமொழி … உலகில் உள்ள மொழிகளுக்கெல்லாம் தாய் … தமிழே திராவிட மொழிகளுக்குத் தாய் … ஆரியத்திற்கும் மூலம் … மேலும் மூழ்கிவிட்ட குமரிக்கண்டத்திலிருந்துதான் முதல் மாந்தரினம் தன் தாய்மொழியான - உலக முதல் மொழியான – தமிழுடன் தோன்றியது. இதுவே பாவாணரின் அடிப்படைக் கோட்பாடுகளாகும். திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன்கோயில் என்ற ஊரில் பிறந்த ‘தேவநேசன்’ பின்னர் ‘தேவநேயன்’ என்று அழைக்கப்பட்டார். தமிழாசிரியர் மாசிலாமணி என்பவர் இவருக்குச் சூட்டிய ‘கவிவாணர்’ என்ற அடைமொழியும் பின்னர் ‘பாவாணர்’...
வெள்ளி, 12 ஜூன், 2020
பேராசிரியர் வ. அய். சுப்பிரமணியம்
2:09 AM
ந.தெய்வ சுந்தரம்
No comments
பேராசிரியர் வ. அய். சுப்பிரமணியம் (1926-2009) … வ(டசேரி) (அய்)யம்பெருமாள் சுப்பிரமணியம் … துறைகள் பலவற்றையும் பேராசிரியர்கள் பலரையும் உள்ளடக்கிய ஒன்றுதான் பல்கலைக்கழகம் என்றால், பேரா. வ.அய்.சு. அவர்களும் நம்மிடையே நடமாடிய உயிர்ப்புள்ள , துடிப்புள்ள ஒரு பல்கலைக்கழகம்தான்! கேரளத்தில் மொழியியல்துறையை (1963) உருவாக்கினார். திராவிட மொழியியல் கழகத்தை நிறுவினார் (1971). உலகத் திராவிட மொழியியல் பள்ளியை (1997) நிறுவினார். தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தை வடிவமைத்தார். ஆந்திரத்தில் குப்பம் என்ற இடத்தில் திராவிடப் பல்கலைக்கழகத்தை உருவாக்கினார். ஹம்பியில் கன்னடப் பல்கலைக்கழகமும் உருவாகக் காரணமாக அமைந்தார் எனப் பேரா. தமிழவன் கூறுகிறார். பேராசிரியர்கள்...