தமிழ்மொழி வளர்ச்சிக்கு . . .
----------------------------------------------------------------------
தாய்மொழித் தமிழே தமிழர்களுக்கு அனைத்துத் துறைகளில் ஆட்சிமொழி ! பயிற்றுமொழி! வணிகமொழி! பொருள்உற்பத்திக்கான மொழி!
ஆங்கிலம் உட்பட பிறமொழிகள் நமக்கு அந்நிய மொழிகளே!
இலக்கியங்களையும் இலக்கணங்களையும் மட்டும் கற்றுக்கொடுப்பதே தமிழ்க்கல்வி என்னும் கண்ணோட்டத்தைக் கைவிடுங்கள்!
அறிவியல்தமிழுக்கு அதிகக் கவனம் செலுத்துங்கள்!
இன்றைய தமிழுக்கு முக்கியத்துவம் அளியுங்கள்!
தற்கால மொழியியல்துறையின் வளர்ச்சியைப் பயன்படுத்துங்கள்! தமிழ்மொழிக் கல்வியிலும் தமிழ் வளர்ச்சிக்கான பிற திட்டங்களிலும் மொழியியல் துறையினரை ஈடுபடுத்துங்கள்!
மொழியியலையும் தமிழ்மொழி ஆய்வையும் இணைத்துச் செயல்படுத்துங்கள்! அப்போதுதான் தமிழின் சிறப்பு உலக அளவில் அறிஞர்களை எட்டும்!
இன்றைய தமிழ் இலக்கணம், இன்றைய தமிழ் அகாரதிகளைத் திட்டமிட்டு உருவாக்குங்கள்.
தொலைநோக்குப் பார்வையில் தமிழ்மொழி வளர்ச்சித்திட்டம் உருவாக்கிச் செயல்படுத்துங்கள்!
விருதுகள், சிலைகள், மாநாடுகள் என்றுமட்டும் தமிழைச் சுருக்கிவிடாதீர்கள்!
இதுவே தமிழ்நாட்டின் மொழிக்கொள்கையாக இருத்தல்வேண்டும்!
------------------------------------------------------------------
0 கருத்துகள்:
கருத்துரையிடுக