சந்தி , இலக்கண
விதிகள் ஒருபுறம் இருக்கட்டும். எனது வினா ... தமிழகத்திலுள்ள மிகப் பெரிய கல்வி
நிறுவனங்கள் .... தமிழோ அல்லது ஆங்கிலமோ... எதுவாக இருந்தாலும்.... அந்த மொழியில்
எழுத்துப்பிழை, இலக்கணப்பிழை
இல்லாமல் எழுதமுடியாதா? அதுவும்
பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிற விளம்பரப் பலகைகள், அறிவிப்புகள்
போன்றவற்றில் தவறு இல்லாமல் மொழியைப் பயன்படுத்தமுடியாதா? அதற்கான
கருத்துரைகளை வழங்கும் ஆசிரியர்கள் இருக்கமாட்டார்களா? ஆங்கிலமொழியைத்
தவறு இல்லாமல் கையாளவேண்டுமென்று நினைக்கிற நிறுவனத்தார்கள்... தமிழ்மொழியைக்
கையாளுவதில்மட்டும்.. ஏன் இவ்வாறு பொறுப்பு இல்லாமல் செயல்படுகிறார்கள்? தமிழ் என்றால்
ஒரு இளக்காரம் இவர்களுக்கு என்பதுதான் எனது கருத்து. இந்த அலட்சியப்போக்கு
கைவிடப்படவேண்டும் என்பதே எனது வேண்டுகோள். ஆங்கிலத்தை ஆங்கிலமாக எழுதுங்கள்.
அதுபோலத் தமிழைத் தமிழாக எழுதுங்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக