புதன், 3 அக்டோபர், 2012
ஞாயிறு, 23 செப்டம்பர், 2012
தமிழ் வளர்ச்சியில் கணினித்தமிழ்
6:21 AM
ந.தெய்வ சுந்தரம்
1 comment
தமிழ் வளர்ச்சியில் கணினித்தமிழ்
( பேரா. ந. தெய்வ சுந்தரம்)
தமிழ்மொழியின்
சிறப்புப்பற்றி அனைவரும் அறிவோம். உலகின் தொன்மையான மொழிகளின் பட்டியலில்
முன்வரிசையில் இருக்கும் பெருமை தமிழுக்கு உண்டு. தொன்மையான மொழிகள்
சில தங்களது வரலாற்றுவளர்ச்சியில் தொடர்ச்சியின்றி
வழக்கிழந்துள்ளன. ஆனால்
தமிழ்மொழியோ மக்கள் மொழியாகத் தொடர்ந்து வாழ்ந்தும் வளர்ந்தும் வருகிறது.
இலக்கியச்
செழுமையிலும் இலக்கண வளத்திலும் முன்னணியில் நிற்பது தமிழ் மொழி. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து தமிழின் இலக்கியங்களும் இலக்கணங்களும்
வளர்ச்சியடைந்து வருகின்றன. இன்றைய மொழி ஆய்வாளர்கள் வியக்கத்தக்கவகையில் பழந்தமிழ் இலக்கண நூல்களும்
உரையாசிரியர்களின் உரைகளும்
அமைந்துள்ளன. தொல்காப்பியத்தின் அமைப்பும் இலக்கணக் கோட்பாடுகளும்
அதனடிப்படையில் அமைந்துள்ள தமிழ் அமைப்பு விளக்கங்களும் வாய்பாடுகளும்
இன்றைய மொழியியலின் பல்வேறு கோட்பாடுகளை உள்ளடக்கி நிற்கின்றன என்றால் அது மிகையாது.
இவ்வாறாக, தொன்மை, வரலாற்றுத்தொடர்ச்சி,
இலக்கிய வளம் , இலக்கணச் செல்வம் என்று தமிழின்
சிறப்புகளைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.
இவ்வாறு
சீரும் சிறப்பும் பெற்ற தமிழ்மொழி, இந்திய அரசின் ஆட்சிமொழிகளில்
ஒன்றாகும் தகுதியை இன்றுவரை பெறவில்லை. இந்திய நாட்டின் மக்கள்தொகை
122 கோடி என்று சொல்கிறார்கள். இதில் தமிழ்நாட்டுத்
தமிழர் தொகை 7.2 கோடி என்பர். மற்ற
அண்டைய மாநிலங்களில் இருக்கும் தமிழர் தொகை 2 கோடியைத் தொடும். ஆனால், இவர்கள்
தமிழை ஆட்சிமொழியாகப் பெறும் வாய்ப்பை இழந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டில் வாழும் தமிழர் எண்ணிக்கை ஒரு கோடியை எட்டும். மொத்தத்தில்
கிட்டத்தட்ட 10 கோடி மக்கள் உலகத்தில் தமிழோடு தொடர்புடையவர்கள் ஆவர். ஆனால் இந்திய அரசின் ஆட்சிமொழிகளில் ஒன்றாகத் தமிழ்
இன்றுவரை ஆக்கப்படவில்லை. இந்தியமொழிகள் பற்றிய
நடுவண் அரசின் விவர அட்டவணைப்படி, இந்தோ - ஆரியமொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் அனைத்தையும் பேசுகிற மக்கள் 76.86 விழுக்காடு என்றால், திராவிடமொழிகள் பேசுகிற மக்கள்
20.82 விழுக்காடு ஆகும். ஐந்தில் ஒரு பங்கு மக்கள்
பேசும் திராவிடமொழிகள் எதுவுமே இந்திய அரசின் ஆட்சிமொழிகளாக ஆக்கப்படவில்லை.
இது மிகவும் வருந்தத்தக்க ஒரு நிலையாகும்.
அரசியல்
சட்டம் மூலம் இந்தி மொழி ஆட்சிமொழியாக ( இந்தியாவில் தேசிய
மொழி என்று ஒன்று இல்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும்
) ஆக்கப்பட்டுள்ள நிலையில், அம்மொழியை இந்தியக் கூட்டரசில் இடம்பெற்றுள்ள இந்திமொழி
பேசாத இனத்தினரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதே இந்திய நடுவண் அரசின் கொள்கை.
இந்திய அரசியல் சட்டத்தில் 8-ஆவது அட்டவணையில்
முதலில் 18 மொழிகள் இடம்பெற்றிருந்தன.
தற்போது 22 மொழிகள் இடம் பெற்றுள்ளன. இந்த அட்டவணையின் நோக்கம் பற்றி
அரசியல் சட்டத்தில் ( பிரிவு 344(1), 351) தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இந்திமொழியை
ஆட்சிமொழியாக நடைமுறைப்படுத்துவதற்கு அமைக்கப்படும் ஆட்சிமொழி ஆணையத்தில் இந்த 22
மொழிகள் பேசுவோருக்கும் இடம் உண்டு. மேலும் இந்தி மொழியானது இந்த அட்டவணையில் உள்ள
மொழிகளிலிருந்து தேவையானவற்றைப் பெற்றுத் தன்னை மேலும் வளர்த்துக்கொள்ளவேண்டும்.
மற்றபடி இந்த அட்டவணை மொழிகளுக்குரிய உரிமைகள் பற்றி எந்தக் குறிப்பும் அரசியல்
சட்டத்தில் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திமொழி ஆட்சிமொழி
என்பதை இந்திபேசாத மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஏற்க மறுக்கிற நிலையில், அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளும்வரை ஆங்கிலம் இணைப்புமொழியாக
நீடிக்கும் என்ற ஓர் உறுதிமொழியும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால்
இறுதியில் இந்திமொழியை மட்டுமே ஆட்சிமொழியாக
இந்நாட்டின் மக்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளவைப்பதே
இந்திய அரசின் அடிப்படையாகத் தெரிகிறது..
இந்திமொழி ஆட்சிமொழி
என்ற தகுதி பெற்றிருப்பதால், இந்திய அரசின் அனைத்துப் பணிகளிலும்
இந்தியைப் பயன்படுத்தும் நிலையை உருவாக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய
நடுவண் அரசு மேற்கொண்டுவருகிறது. அதற்காக ஒரு தனித்துறையே அரசால்
உருவாக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் இணைப்பு மொழியாகப் பயன்படுத்தத்
தற்போது அனுமதிக்கப்பட்டாலும், இந்திமொழியை முழுமையான ஆட்சிமொழியாக அனைவரும் பயன்படுத்தத்
தேவையான எல்லா நடவடிக்கைகளையும் இந்திய அரசு தொடர்ந்து எடுத்துவருகிறது.
இன்றைய
கணினி காலத்தில் அரசு நிறுவனங்களும் மக்களும் தகவல் பரிமாற்றத்திற்குக் கணினியையே பயன்படுத்திவருவதால், இந்திமொழியைக் கணினியில் பயன்படுத்துவதற்கான அனைத்து வசதிகளையும் உருவாக்க இந்திய அரசு நடவடிக்கை
மேற்கொண்டுவருகிறது. இதுபற்றிய நடுவண் அரசின் கீழ்க்கண்ட குறிப்பைக்
காணலாம்.
Technical
In order to facilitate the use of
Official Language with the help of Mechanical and Electronic equipment,
especially computers, a Technical Cell was set up in the Department of Official
Language in October 1983. The main activities of the Cell are as under:
·
Development of
"Language application tools" - Under this programme LILA Rajbhasha, a
self-learning package through the medium of Bangla, English, Kannada,
Malayalam, Tamil and Telugu has been developed, MANTRA Rajbhasha, an aid tool
for English to Hindi translation has also been developed
·
Organising
computer training programmes in Hindi - Every year around 100 training
programmes are conducted to impart training for the use of Hindi on computers
·
Organising
exhibitions and seminars on bilingual computing - Technical seminars are held
to help the users and manufacturers come face to face to discuss the use of
Hindi software, etc.
The Department of Official Language has now set up its
portal www.rajbhasha.gov.in(External
website that opens in a new window). - http://india.gov.in/knowindia/profile.php?id=33
மேற்கண்ட
குறிப்பில் அடங்கியுள்ள நோக்கங்களைப் பார்த்தால், இந்திமொழியை மட்டுமே முழுமையான ஆட்சிமொழியாகக்
கொண்டுவருவதில் நடுவண் அரசு காட்டும் முனைப்புத் தெளிவாகும்.
1. இந்தியைப் பிற மொழிகள் பேசும் மக்கள் அனைவரும் கணினிவழி கற்றுக்கொள்வதற்கான
மென்பொருள்களை உருவாக்குதல்
2. இந்திமொழி பேசாத மக்கள் ஆங்கிலத்தில் அளிக்கும் தகவல்களை இந்தியில் மொழிபெயர்த்துத்
தரும் கணினிவழி மொழிபெயர்ப்பு மென்பொருள்களை உருவாக்குதல்
3. கணினியில் இந்தியைப் பயன்படுத்துவதற்கான பயிற்சி அளித்தல்
4. இந்தி மென்பொருள்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான கருத்தரங்குகளையும், கண்காட்சிகளையும் ஏற்பாடு செய்தல்
மேற்கூறிய
நோக்கங்களுக்காக நடுவண் அரசின் தகவல்தொழில்நுட்பத்துறை
உட்பட அனைத்துத் துறைகளிலும் பல கோடி ஒதுக்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தி
பேசாத, தெரியாத
மக்களும் இந்திவழியேதான் நடுவண் அரசுடன் தொடர்புகொள்ளவேண்டும்
என்பது நடுவண் அரசின் கொள்கையாக இருக்கிறது. அதற்கு என்ன செய்வது?
ஒன்று அவர்கள் இந்தியைக் கற்றுக்கொள்ளவேண்டும். மற்றொன்று அவர்கள் தங்கள் மொழிகளில் தகவல் அனுப்பினாலும் அது இந்தியில்(தான்) மொழிபெயர்க்கப்பட்டு , நடுவண்
அரசின் கோப்புகளில் இடம்பெறவேண்டும். அதற்கான மொழிபெயர்ப்பு மென்பொருள்களை
உருவாக்கவேண்டும். எப்படியும் இந்திமொழி ஒன்றே இந்திய அரசின் ஆட்சிமொழி என்பது உறுதியாக்கப்படவேண்டும்.
இதுதான் இந்திய அரசின் கொள்கை.
இந்தியிலிருந்து
பிறமொழிக்கும், பிறமொழியிலிருந்து இந்திக்குமான மென்பொருள்களை உருவாக்கும் நோக்கத்திற்காக
இந்திமொழியை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு மென்பொருள்களை உருவாக்க ஆய்வுப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இதனால்
பிறமொழிகளுக்கும் கணினியில் வளர்வதற்கான வழிகள் இருக்கிறதே என்று எண்ணலாம். அடிமை உயிருடன் இருந்தால்தான் ஆண்டை அடிமையின் உழைப்பில் வாழமுடியும்.
அதற்காக அடிமைக்குச் சோறு அளிக்கிறான். அதைப் பாராட்டுவதா
அல்லது ஆண்டை - அடிமை முறையை ஒழிப்பதா என்பதை எண்ணிப்
பார்க்கவேண்டும்.
இந்தியை
மட்டுமே ஆட்சிமொழியாக்குவதற்கான முயற்சியே மேற்கூறியதாகும். பிறமொழிகளின்மீது இந்திமொழியின் ஆதிக்கத்தைத்
திணிப்பதே நடுவணரசின் நோக்கம். இந்தியாவின் பிறமொழிகளையும் ஆட்சிமொழிகளாக
அறிவித்து, அதன்பிறகு மேற்கூறிய கணினிவழி மொழிப்பயன்படுத்தத்திற்கான மொழித்தொழில்நுட்பத்தை
வளர்த்தால் அதை வரவேற்கலாம்.
ஆனால்
மேற்கூறிய நடவடிக்கையானது, இந்திமொழியின் ஆதிக்கத்தை நிலைநாட்டவே மேற்கொள்ளப்படுகிறது.
இத்ற்கு
ஓர் எடுத்துக்காட்டைக் கூறலாம். இந்தியமொழிகளுக்கான மொழிபெயர்ப்புமென்பொருள் உருவாக்குவதற்கான திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்திட்டத்தின்படி, இந்திமொழியின் சில ஆயிரம் சொற்களைத்
திரட்டி, அவற்றிற்கு இணையான பிறமொழிச்சொற்களைக்கொண்ட
ஒரு மின்னகராதி உருவாக்கப்படுகிறது.
இந்திமொழித் தொடர்களின் அமைப்புகளுக்கு இணையான பிறமொழித்
தொடர்களைக் கொண்ட ஒரு தரவுத்தளம் உருவாக்கப்படுகிறது. இவையெல்லாம்
.இந்திமொழியை அடிப்படை மொழியாகக் கொள்ளப்படுவதற்கே!
மேற்கூறிய
கணினிவழி மொழித்தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்தியை ஆட்சிமொழியாக நிலைநிறுத்தும்
முயற்சிக்குப் பல பல்கலைக்கழகங்களிலும், இந்தியத்
தொழில்நுட்பக் கழகங்களிலும் ( ஐஐடி-க்களில் ) மொழித்தொழில்நுட்பத்துறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
பல நூறு கோடிப் பணச்செலவில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
உலகின் தலைசிறந்த மொழித்தொழில்நுட்ப வல்லுநர்களையெல்லாம் வரவழைத்து,
இதற்கான முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
மறைமுகமாக
இன்னொரு முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. கணினிவழி மொழித்தொழில்நுட்பத்தை
இந்தியமொழிகளுக்குச் செயல்படுத்தும் முயற்சியில்
, கணினியில் இடைமொழியாகப் பயன்படுத்த வடமொழியான சமற்கிருதமே ஏற்றது என்ற
கருத்துருவும், “ சமற்கிருத மொழிக்கான பாணினியம்
என்ற இலக்கண நூலே கணினிமொழியியலுக்கு அடிப்படையாக அமைவதற்கு ஏற்றது” என்ற கருத்துருவும் உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு
இந்தி, சமற்கிருதம் ஆகிய இரண்டின் ஆதிக்கத்தைப் பிறமொழிகளின்மீது
திணிக்கப் பலவகைகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இந்தச்
சூழலில் நம் தாய்மொழியான தமிழின் நிலை என்ன? அதன் வளர்ச்சிக்கு
நாம் செய்யவேண்டியது என்ன ?
நமது
முதல் கோரிக்கை - தமிழ் உட்பட அனைத்து இந்தியமொழிகளும் இந்திய அரசின் ஆட்சிமொழிகளாகும் வகையில் இந்திய அரசியல்
சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.
இதனால்மட்டுமே
இந்திமொழியின் ஆதிக்கத்தை முழுமையாகத் தடுக்கமுடியும். இதற்காகப் பிறமொழியினரோடு இணைந்து, தேவையான நடவடிக்கைகளில்
தமிழ் மக்கள் ஈடுபடவேண்டும். தமிழக அரசும் இதற்குத் தேவையான நடவடிக்கைகளை
மேற்கொள்ளவேண்டும்.
அடுத்து, கணினிவழி மொழித்தொழில்நுட்பத்தை இந்தியமொழிகளுக்குச்
செயற்படுத்தி, இந்திமொழியை அடிப்படையாகக்கொண்டு இந்தியமொழிகள்
அனைத்துக்கும் தேவையான மொழிசார்ந்த மென்பொருள்களை உருவாக்கும் நடவடிக்கைகளை இந்திய
அரசு கைவிடவேண்டும். அனைத்து இந்திய மொழிகளும் சமம் என்ற நிலையில் பணிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
தமிழகத்தில்
நமது கடமை :
ஒரு
மொழியைத் திட்டமிட்டு வளர்த்தெடுக்கும் முயற்சி இன்று பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. வழக்கிழந்த ஈப்ரு மொழியையே வழக்குமொழியாக்கத் திட்டமிட்டு இசரேல் வளர்த்தெடுத்துள்ளது. வடமொழியான
சமற்கிருதத்தை மக்களின் பேச்சுமொழியாக்கும் முயற்சியில் பல்வேறு அமைப்புகள் நடுவண்
அரசின் துணையுடன் செயற்பட்டுவருகின்றன.
இந்தோனேசியாவில்
அவர்களுடைய தாய்மொழியை அறிவியலுக்கும் ஏற்ற
மொழியாக வளர்த்துள்ளார்கள். இதுபோன்ற மொழிவளர்ச்சித்
திட்டங்கள் என்பது சீனா, சப்பான், அயர்லாந்து,
தென் ஆப்பிரிக்கா போன்ற பலநாடுகளிலும்
செயற்படுத்தப்பட்டுவருகிறது.
மொழிவளர்ச்சித்
திட்டத்தில் முதன்மையான பணி, குறிப்பிட்ட மொழிக்குரிய தகுதியை
அந்த மொழியைப் பேசும் சமுதாயம் அளிப்பதேயாகும். ஆட்சிமொழி,,
பயிற்றுமொழி, வழிபாட்டுமொழி , ஊடகமொழி, வணிகமொழி , இலக்கியமொழி என்று பல வகைத் தகுதிகளை ஒரு மொழிக்கு அளிப்பது முதன்மைப் பணியாகும்.
இந்திய
அரசின் ஆட்சிமொழித்தகுதி தமிழ்மொழிக்கு அளிக்கப்படவில்லை என்பதை இவ்விடத்தில் மீண்டும்
குறிப்பிடவேண்டும்.
தமிழ்
நாட்டு அரசின் ஆட்சிமொழி என்ற தகுதியானது , தமிழ்மொழிக்கு 1956 ஆம் ஆண்டு தமிழகச் சட்டமன்றப்
பேரவையில் ஒருமனதான தீர்மானத்தின்வழி 1957 சனவரி 23 ஆம் நாளன்று தமிழக அரசாணையாக அறிவிக்கப்பட்டது.
அதன்
அடிப்படையில் தமிழ்நாட்டரசின் அலுவலகப் பணிகள் அனைத்தும் தமிழில் மேற்கொள்வதற்கான பல
முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் நடைமுறைப்படுத்துவதில்
பெருங்குறைகள் உள்ளன. அரசின் தலைமைச் செயலக நடைமுறைகள் இன்னும் ஆங்கிலத்திலேயே
உள்ளன. மக்கள்நிலை அரசுத் தொடர்புகள் ஓரளவுதான் தமிழில் உள்ளன.
நீதிமன்ற
மொழியாக இன்னும் தமிழ்மொழி முழுமையாக ஆக்கப்படவில்லை. உயர்நீதிமன்றத்தின் மொழி என்ற தகுதி இன்னும் தமிழுக்கு அளிக்கப்படவில்லை.
அது அளிக்கப்படுவதற்கான முயற்சிகளைத் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளவேண்டும்.
கல்விநிலையங்களில்
பயிற்றுமொழியாக ஆங்கிலமே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவருகிறது. அரசுப் பள்ளிகளில்கூட ஆங்கிலம் பயிற்று மொழி என்ற நிலை உள்நுழையத்
தலைப்படுகிறது. தனியார்ப் பள்ளிகளில் ஆங்கிலமே பயிற்றுமொழியாக இருக்கிறது.
1960களில் தமிழ்நாடெங்கும் 13 பள்ளிகளில் மட்டுமே ஆங்கிலம் பயிற்றுமொழியாக இருந்தது.
இன்றோ 5000க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்றுமொழியாக இருக்கிறது. உயர்நிலை,
ஆய்வுப் படிப்புகளில் பல காரணங்கள் கூறப்பட்டு, தமிழ் புறக்கணிக்கப்படுகிறது. கலைச்சொல் இல்லை,
பாடப்புத்தகங்கள் இல்லை, அயல்நாடுகளுக்குப் பணிக்குச்
செல்பவர்களுக்குச் சிக்கல் என்றெல்லாம் வெவ்வேறு வகையிற் கூறி, தமிழ் புறக்கணிக்கப்படுகிறது. முன்னே சொன்னதுபோல் தனியார்
பள்ளிகள் பெரும்பாலானவற்றில் ஆங்கிலமே பயிற்றுமொழியாக
இருந்துவருகிறது.
தமிழகக்
கோயில்களில் வடமொழியே வழிபாட்டுமொழியாக நடைமுறையில் இருந்துவருகிறது. தமிழ்நாட்டரசின் தலையீட்டின் பயனாக, " தமிழும் வழிபாட்டுமொழியாக
இருக்கலாம் " என்ற ஒரு நிலை இன்று ஏற்பட்டுள்ளது.
வணிகமொழியாக இன்றும்
ஆங்கிலமே ஆளுமை செலுத்தி வருகிறது. தமிழகத்தில்
எந்தக் கடையிலும் கணியச்சின் வழியே கொடுக்கப்படும் பட்டிகளும், பற்றுச்
சீட்டுக்களும் ஆங்கிலத்திலேயே இருக்கின்றன. எல்லாத் தனியார் கடையும் தங்களின்
வாங்குமானம், விற்றுமானம், பகிர்மானம், விற்பாணைப் பெறுமானங்கள் போன்றவற்றை
ஆங்கிலத்தின் வழியேதான் செய்கின்றன. அரசு பெறுகின்ற விற்பனை வரித்தொடர்பான
ஆவணங்களும் ஆங்கிலத்திலேயே இருக்கின்றன. எல்லாப் பொருள்களின் செயற்பாட்டுக்
கையேடுகளும் ஆங்கிலத்திலேயே இருக்கின்றன. மொத்தத்தில் வணிகத்துறையில் ஆங்கிலமே ஆளுமை
செய்கிறது; தமிழுக்கு அங்கு இடமில்லை. அப்பொழுது தமிழ்வழிப் படித்தோருக்கு வேலை வாய்ப்பு
இல்லையென்று ஆகிறது. தமிழ்நாட்டரசின் தலையீட்டின்
பயனாகவும், சில அதிகாரிகளின் முயற்சிகளினாலும் வணிக நிறுவனங்களின்
பெயர்ப்பலகைகளில் மட்டும் தமிழ் இடம் பெற்றுள்ளது. தமிழ்
வளர்ச்சிக்குச் செய்யவேண்டிய பணிகளில் இது ஒரு விழுக்காடுகூடக் காணாது.
ஊடகங்களில் , குறிப்பாக வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் ஆங்கிலம் கலந்த தமிழே முற்றிலும்
பயன்படுத்தப்பட்டுவருகிறது. இதன் பயனாக இதைப் பார்க்கும் தமிழ்க் குடும்பங்களில்கூட வீட்டில் பேசப்படும் தகுதியைத்
தமிழ் இழந்து வருகிறது என்பது ஒரு கசப்பான உண்மை. தமிழே
புழங்காது தமிழர் தம் சமுதாயத்தை நடத்திக்கொண்டிருக்கும் நிலை வெட்கக்கேடானது
என்பதை உணரவேண்டும்.
மேற்குறிப்பிட்ட
தகுதிகள் அனைத்தும் தமிழ்மொழிக்கு முழுமையாக அளிக்கப்படத் தேவையான பணிகளை மேற்கொள்வது
தமிழர்களின் தலையாயக் கடமையாகும். இதுவே தமிழ்நாட்டரசின் மொழிக்கொள்கையாகவும்
அமையவேண்டும்.
அடுத்த
கட்டமாக, மேற்கூறிய தகுதிகளைப் பெறுகிற தமிழ்மொழியானது அதற்குரிய
பணிகள் அனைத்தையும் மேற்கொள்ளும் வலிமை பெறுவதாகும். இதற்குத்
திட்டமிட்டு தமிழ்மொழி வளர்ச்சியை மேற்கொள்ளவேண்டும்.. கலைச்சொல்லாக்கம்
, அறிவியல் நூலாக்கம் , ஊடகக்கருத்தாடல் உள்ளிட்ட அனைத்து கருத்தாடல்களையும்
தமிழில் மேற்கொள்வதற்கான பணிகள் போன்றவை இதில் அடங்கும்.
இன்றைய
மின்னணுக் காலத்தில் மேற்கூறிய பணிகள் அனைத்திலுமே
கணினி போன்ற மின்னணுக்கருவிகள் அல்லது மின்னணு ஊடகங்கள் முதன்மை பெற்றுள்ளன. ஒரு கருத்தையோ
தகவலையோ உருவாக்கவும், பெறவும் , அதைப்
பரிமாற்றம் செய்யவும் மொழியே அடிப்படை. இன்று இப் பணிகள் அனைத்தும்
அலைபேசி, கணினி போன்ற மின்னணுக்கருவிகள் வழியே மேற்கொள்ளப் படுகின்றன.
இக்கருவிகளின் வளர்ச்சிகாரணமாக இடம், காலம்
போன்றவற்றில் தடையில்லை.
எனவே
கணினி, அலைபேசி போன்ற மின்னணு ஊடகங்களில் தமிழ்மொழி முழுமையாக
இடம்பெறுவது கட்டாயமாகிறது. கல்வெட்டு, ஓலைச்சுவடி,
செப்புப்பட்டயம் ஆகியவற்றிலிருந்து தாளுக்கு வந்த தமிழ், கணினித்தமிழ் என்ற ஒரு புதிய வகைப்பாட்டிலும் மேன்மை பெறவேண்டும்.
அம் மேன்மையை அடைவதைத் தடுக்கும் தடைகளையும், முட்டுப்பாடுகளையும்
தகர்க்கவேண்டும்.
இன்றைய
உலகமயவயமாக்கச் சூழலில் ஒரு மொழி மின்னணு ஊடகங்களுக்கு ஏற்ற மொழியாகத் தன்னை அமைத்துக்கொள்ளவில்லையென்றால்
அது பயன்பாட்டில் தன் வலிமையை இழந்து
வழக்கிழந்த மொழியாகக்கூட மாறிவிடும்.
மின்
ஆளுகை , மின்கல்வி
, மின்வணிகம் என்று பல துறைகளிலும் தமிழ்மொழி வளர்ந்து நிற்கவேண்டும். இந்நிலை நாம் விரும்புவதால் மட்டுமே தானாக ஏற்பட்டுவிடாது. திட்டமிட்டுப் பணியாற்றினால்தான் இது நிறைவேறும்.
இந்திமொழியை இந்த
நிலைக்கு உயர்த்த இந்திய அரசு மேற்கொள்ளும்
முயற்சிகள்பற்றியும், வடமொழியான சமற்கிருதத்தின் வளர்ச்சிக்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளையும்
முன்னரே கண்டோம். சவகர்லால் நடுவண் பல்கலைக்கழகம் போன்றவற்றில்
சமற்கிருத கணினிமொழியியல் துறைகள் அமைக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
கணினித்தமிழின் இன்றைய
வளர்ச்சிநிலை:
சில
ஆண்டுகளுக்கு முன்வரை, தமிழ் எழுத்துருக்களையே கணினியில் காணமுடியாத நிலை இருந்தது.
இன்று அந்நிலை மாறிவிட்டது. இருப்பினும் சில பன்னாட்டு
நிறுவனங்களின் மென்பொருள்களில் ( இன்டிசைன் , கோரல்டிராவ் போன்றவற்றில் அண்மையில் தமிழுக்கு உரிய இடம் அளிக்கப்பட்டுள்ளதாக
அறிகிறோம்) தமிழுக்கு உரிய இடம் அளிக்கப்படவில்லை.
இதனால் தமிழ் அச்சீட்டாளர்களுக்குப்
பல சிக்கல்கள் நீடிக்கின்றன.
ஒருங்குறி சேர்த்தியத்தில் தமிழ் எழுத்துகளுக்குத் தேவையான
இடங்கள் முழுமையாக அளிக்கப்படவில்லை. அதற்குக் காரணம்,
வடமொழிகளின் எழுத்து சார்ந்து,
பிற இந்திய மொழிகளுக்கும் இடம் அளிக்குமாறு ஒருங்குறி சேர்த்தியத்திடம்
தெரிவித்த இந்திய அரசின் நிலைப்பாடேயாகும். இதனால்
இன்று தமிழுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இச்சிக்கலைத் தீர்க்கத் தமிழ்நாடு அரசு முனைந்து
செயற்படவேண்டும்.
கணினித்தமிழ் வளர்ச்சி
என்பது தமிழ் எழுத்துருக்கள், விசைப்பலகையோடு நின்றுவிடக்கூடியதல்ல. நடைமுறைக்குத் தேவையான அனைத்து மென்பொருள்களும் தமிழில் உருவாக்கப்படவேண்டும்.
சொல்லாளர் , ஒளிவழி எழுத்துணரி, பேச்சு-எழுத்துமாற்றி, எழுத்து-பேச்சுமாற்றி, இயந்திரமொழிபெயர்ப்பு போன்ற மென்பொருள்களை உருவாக்கவேண்டும்.
கணினிவழி
என்னென்ன பணிகளை மேற்கொள்கிறோமோ, அத்தனைப் பணிகளுக்கும் தேவையான
மென்பொருள்களைத் தமிழில் உருவாக்கவேண்டும். பார்வைக் குறையுடையவர்கள்
யாருடைய துணையும் இன்றி, கணினி முன் அமர்ந்து, இணையதளத்தைப் பார்வையிடமுடியும். மின்னஞ்சல்களை ஆங்கிலத்தில்
அனுப்ப முடியும். அவர்களுக்கு உதவும்வகையில் தேவையான மென்பொருள்களைத்
தமிழிலும் உருவாக்கவேண்டும்.
பேச்சு - எழுத்துமாற்றி மென்பொருள் தமிழுக்கு உருவாக்கப்பட்டால், அவர்கள் பேசுவதைக்
கணினியில் எழுத்துகளில் வடிக்கமுடியும். இதுபோன்ற
எத்தனையோ பயன்பாட்டு மென்பொருள்களைத் தமிழுக்கு உருவாக்கவேண்டும். அப்போதுதான் தமிழ் அனைத்துச் செயற்பாடுகளுக்கும்
பயன்படக்கூடிய மொழி என்கிற வளர்ச்சியை எட்டும்.
தமிழை
அடிப்படையாகக்கொண்டு, தமிழ் - பிறமொழிகள் மொழிபெயர்ப்பு மென்பொருள்களை உருவாக்கவேண்டும்.
தொல்காப்பியம் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கண நூல்களிலுள்ள நெறிகளின் அடிப்படையில்
பல மென்பொருள்களை உருவாக்கலாம்.
இதற்குத்
தேவை, கணினிமொழியியல், மொழித்தொழில்நுட்பம்
அடிப்படையில் தமிழ்மொழி அமைப்பைக் கையாளக்கூடிய மென்பொருள்களை ஆய்வு அடிப்படையில்
உருவாக்குவதேயாகும். இந்தப் பணியில் நாம் வளர்ச்சியடையும்போதுதான்,
மேற்குறிப்பிட்ட பயன்பாட்டுத் தமிழ் மென்பொருள்களை உருவாக்கமுடியும்.
தமிழக
அரசு மேற்கொள்ளவேண்டிய கணினித்தமிழ் வளர்ச்சிக்கான
நடவடிக்கைகளில் சில:
1. தமிழ் வளர்ச்சித் திட்டத்திற்கென ஓர் ஆணையம் அமைக்கப்படவேண்டும். தமிழை எதிர்கால நடைமுறைக்கு ஏற்றவகையில் வலுப்படுத்தும் ஆணையமாக இது
இருக்கவேண்டும்.
2. திட்டமிட்டமுறையில் தமிழ்வளர்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்ளவேண்டும்.
3. அந்த ஆணையத்தின்கீழ், கணினித்தமிழ் வளர்ச்சிப் பிரிவு ஒன்று அமைக்கப்படவேண்டும்.
இப்பிரிவு, கணினித்தமிழ் வளர்ச்சிக்கான அனைத்துப் பணிகளையும்
மேற்கொள்ளவேண்டும். மின்-ஆளுகை,
மின்கல்வி, மின்வணிகம் போன்ற பல முனைகளில் தமிழ் செயற்பட வழிவகுக்கவேண்டும்.
4. தமிழகத்தில் நுழைக்கப்படும் கணினிகள் , அலைபேசிகள் போன்ற மின்னணுக்
கருவிகள் தமிழைப் புழங்கும் கருவிகளாக இருக்கவேண்டும். தமிழைப் புழங்கும்
கருவிகளுக்கு விற்பனை வரிச் சலுகையும், தமிழைப் புழங்காத கருவிகளுக்குக் கூடுதல்
விற்பனை வரியும் விதிக்கப்படவேண்டும். அதைபோல வணிகத்தில் எங்கெல்லாம் தமிழ்
வழக்குமொழியாக ( காட்டு : நிறுவனங்கள், கடைகள், அங்காடிகள்)
இருக்கிறதோ, அங்கெல்லாம் விற்பனை வரிச் சலுகை அளிக்கப்படவேண்டும். தமிழ்நாட்டில் தமிழ்ப்படித்தோருக்கு வேலைவாய்ப்பு உறுதி என்ற
நிலை உருவாகவேண்டும்.
5. C-DAC போன்று ஒரு மொழித்தொழில்நுட்ப நிறுவனம்
நிறுவப்பட்டு, தமிழ் மென்பொருள்களை உருவாக்கவேண்டும்.
6. கணினித்தமிழுக்கு மனிதவளங்களைப் பெருக்க, தமிழ்க்கணினிமொழியியல் ஆய்வு நிறுவனம் ஒன்று நிறுவப்படவேண்டும்.
7.பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில் கணினிமொழியியல்,
மொழித்தொழில்நுட்பப் படிப்புகளையும் ஆய்வுகளையும் மேற்கொள்ள வேண்டும்.
8.
பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்கள் தமிழகத்தில் கல்விநிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் போன்றவற்றிற்குத் தேவையான மென்பொருள்களை அளிக்கும்போது,
அவையெல்லாம் தமிழ்வழியே பயன்படுத்தத் தேவையான அமைப்புகளோடு அளிக்கவேண்டும்
என்று வலியுறுத்தி, அதற்கு ஊக்கமளிக்கும்வகையில் சில சலுகைகளை
அவற்றிற்கு அளிக்கலாம்.
மேற்கூறிய
வகைகளில் தமிழை ஒரு மின்னணுமொழியாக வளர்த்தெடுக்கவேண்டும். அதற்கான அனைத்துப் பணிகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளவேண்டும்.
கணினிக்கேற்ற
ஒரு மொழியாகத் தமிழை வளர்த்தெடுக்கத் தேவையான
மொழித்தொழில் நுட்பத்துறையின் அனைத்து வளர்ச்சிகளையும் தமிழுக்குக் கொண்டுவந்து சேர்த்தல்வேண்டும்.
தமிழ்
வளர்ச்சிக்கான – குறிப்பாகக் கணினித்தமிழ் வளர்ச்சிக்கான – மேற்கூறிய பணிகளைத்
தமிழ்நாட்டு அரசு மேற்கொள்ளவேண்டும். இப்பணிகளை மேற்கொள்வதன்மூலம் தமிழ்மொழி
வரலாற்றில் தனி முத்திரையைத் தமிழ்நாட்டு அரசு பதிக்கவேண்டும்.
தமிழ் மக்களே, தமிழ் ஆர்வலர்களே, ஆசிரியர்களே,
ஆய்வாளர்களே, மாணவர்களே, அனைவரும் கணினித்தமிழ் வளர்ச்சியே எதிர்காலத் தமிழ்
வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்பதை உணர்ந்து தமிழகமெங்கும் பள்ளிகளில்
கல்லூரிகளில் கல்வி நிறுவனங்களில் பொது அரங்குகளில் பரப்புரை செய்தும் ஆய்வுகள்
மேற்கொண்டும் நடைமுறைப்படுத்தத் திட்டமிடவும் அரசை வலியுறுத்தவும் வேண்டும் என்று
கேட்டுக் கொள்கிறோம்.
மேற்கூறிய நோக்கங்களை முன்னிறுத்தி 2012 திசம்பர்
15 ஆம் நாளன்று தமிழ் வளர்ச்சியில் கணினித்தமிழ் என்ற ஒரு முழக்கத்தை முன்வைக்கும்
மக்கள் தழுவிய மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது. கணினித்தமிழ் வளர்ச்சிக்குத்
தேவையான வளர்ச்சிப் பணிகளைத் தெளிவுபடுத்திக்கொண்டு, அவற்றைத் தமிழ்நாட்டு அரசின் பார்வைக்குக் கொண்டுசெல்வதே
இம்மாநாட்டின் நோக்கமாகும்.
Languages for which no adequate computer
processing is being developed,
risk gradually losing their place in the global Information Society, or even
disappearing, together with the cultures they embody, to the detriment of one
of humanity's great assets: its cultural diversity - Antonio
Zampolli, Giovanni Battista
Varile
தேவையான அளவிற்குக் கணினிச்செயல்பாடுகளைத் தங்களுக்கு
உருவாக்கிக்கொள்ளாத மொழிகள் படிப்படியாகத் தகவல் தொழில்நுட்பச் சமுதாயத்தில்
தங்களுக்குரிய இடத்தை இழந்துவிடும் நிலை ஏற்படும் ; மேலும் அவை தாங்கள் உள்ளடக்கியுள்ள பண்பாடுகளோடு சேர்ந்து மறையும்
நிலையும் ஏற்படலாம் ; இது மாந்த இனத்தின் பண்பாடுகளில்
வேற்றுமை என்ற மிகப் பெரும் சொத்துக்குத் தீங்கு இழைக்கக்கூடிய ஒன்றாகும்.
- Antonio Zampolli, Giovanni Battista Varile
வெள்ளி, 21 செப்டம்பர், 2012
துணைநூற்பட்டியல் (கணினி மொழியியல்)
11:04 PM
ந.தெய்வ சுந்தரம்
1 comment
1. Abeille, Anne. Treebanks : Building and Using
Parsed Corpora. Dordrecht: Kluwer Academic Publishers, 2003.
2. Abney, Steven. Semisupervised Learning and
Computational Linguistics. New York: Chapman & Hall/CRC, 2008.
3. Allen, J., S. Hunnicut and D.H. Klatt. From Text to
Speech: The MITTALK System. Cambridge: Cambridge University Press, 1987.
4. Allen, James. Natural Language Understanding.
New Delhi: Pearson Education, Inc., 2008.
5. Alshawi, H (ed.).. Cambridge , Mass.: MIT Press, The
Core Language Engine. 1992
6. Arnold, D. et al. Machine Translation : an
introductory guide. Manchester , Oxford: NCC/Blackwell, 1994.
7. Arnold, D., L. Balkan , R. Lee Humphreys , S. Meijer
and L. Sadler. Machine Translation : An Introductory Guide. Manchester:
NCC Blackwell, 1994.
8. Aston, G. and L. Burnard. The BNC Handbook .
Edinburgh: Edinburgh University Press, 1988.
9. Atkins, B.T.S. and A. Zampolli (eds.). Computational
Approaches to the Lexicon. New York: Oxford University Press, 1994.
10. Bailly, G., and Benoit , C. (ed.). Talking Machines
: theories, Models, and Designs. Elsevier Science, 1992.
11. Baker, Paul., Hardie, andrew and McEnery, Tony. A
Glossory of Corpus Linguistics. Edinburgh: Edinburgh University Press,
2006.
12. Basi, Harikumar. Automatic Translation ( Seminar
Proceedings). Thiruvannanthapuram , India: DLA Publications, 1994.
13. Biber, D. and Conrad, S. Corpus Linguistics:
Investigating Language Structure and Use. Cambridge: Cambridge University
Press, 1998.
14. Bird, S. Computational Phonology : A Constraint-Based
Approach. Cambridge: Cambridge University Press, 1995.
15. Blekhman, Michael S. and Montreal (eds.). Machine
Translation : Theory and Practice. New Delhi: Bahri Publications, 2001.
16. Boguraev, B and T.Briscoe. Computational
Lexicography for Natural Language Processing. London: Longman, 1989.
17. Bresnan, J. (ed.). The Mental Representation of
Grammatical Relations. Cambridge, Mass.,: MIT Press, 1982.
18. Cameron, K. Computer-Assisted Language Learning :
Media, Design and Applications. Lisse: Swets and Zeitlinger, 1999.
19. Carl, Michael and Andy Way (eds.). Recent Advances
in Example-Based Machine Translation. Norwell: Kluwer Academic Publishers,
2003.
20. Cole, Ronald. Survey of the State of the Art in
Human Language Technology. New York : Cambridge University Press, 2009.
21. Daelemans, Walter and Bosch , A.V.D. Memory-Based
Language Processing. New York: Caambridge University Press, 2009.
22. Dale, R. , H.Moisl and H. Somers ( eds.). Handbook
of Natural Language Processing. New York: Marcel Dekker, Inc., 2000.
23. Dale, R., Mellish, C.S., and Zock , M. Current
Research in Natural language Generation. London: Academic Press, 1990.
24. Dorr, Jean Bonnie. Machine Translation : a View
from the Lexicon. MIt Press, 1993.
25. Dougherty, C. Ray. Natural Language Computing: An
English Generative Grammar in Prolog. New Jersey: Lawrence Erlbaum
Associates, Inc.,, 1994.
26. Dutoit, T. An Introduction to Text-to-Speech
Synthesis. Dordrecht: Kluwer Academic Publishers, 1997.
27. Eijak, Jan van and Unger, Christina. Computational
Semantics with Functional Programming. Cambridge: Cambridge University
Press, 2010.
28. Fant, Gunnar. Speech Acoustics and Phonetics.
Dordrecht: Kluwer Academic Publications, 2004.
29. Fellbaum, C . (ed.). WordNet: An Electronic Lexical
Database. Cambridge, Mass.: MIT Press, 1998.
30. Gazdar, G., Klein , E., Pullum, G. and Sag, I. Generalized
Phrase Structure Grammar. Blackwell, 1985.
31. Graham, Tony. Unicode : A Primer. Chicago: MIS
Press, 2001.
32. Grishman, Ralph. Computational Linguisitcs: An
introduction. Cambridge University Press, 1986.
33. Halliday, MAK., Wolfgang Teubert, Colin Yallop , anne
Cermakova and Harol L. Sirkin. Lexicology and Corpus Linguistics: An
Introduction. New York: Continuum, 2004.
34. Halteren van, Hans (ed.). Syntactic Wordclass
Tagging. Dordrecht: Kluwer Academic Publishers, 1999.
35. Harrington, Jonathan and Steve Cassidy. Text,
speech and Language Technology. Kluwer Academic Publishers, 1999.
36. Hausser, Roland. A Computational Model of Natural
Language Communication. Springer, 2006.
37. —. Foundations of Computational Linguistics :
Human-Computer Communication in Natural Language. Springer, 2001.
38. Hirst, G. Anaphora in Natural Language
Understanding. Berlin: Springer Verlag, 1981.
39. Hopcroft, J.E. and J.D. Ullman. Introduction to
Automata Theory, Language and Computation. Reading, Mass.: Addison-Wesley,
1979.
40. Huang, X.D., Ariki , Y. and Jack , M. Hidden Markov
Models for Speech Recognition. Edinburgh: Edinburgh University Press, 1990.
41. Hunston, S. Corpora in Applied Linguistics.
Cambridge: Cambridge University Press, 2002.
42. Hutchins, John , W. and Somers , L .Harold. An
Introduction to Machine Translation. London: Academic Press, 1992.
43. Hutchins, W.J. Machine Translation : Past, Present,
Future. Chichester: Ellis horwood, 1986.
44. Jelinek, F. Statistical Methods for Speech
Recognition. Cambridge: MIT Press, 1998.
45. Jurafsky, Daniel and H.Martin, James. Speech and
Language Processing. New Jersey: Pearson Prentice Hall, 2009.
46. Karttunen, Beesley R. Kenneth and Lauri. Finite
State Morphology. Stanford: CSLI Publications, 2003.
47. Kennedy, G. Corpus Linguistics. London:
Longman, 1999.
48. Kennedy, G. An Introduction to Corpus Linguistics.
London: Longman, 1998.
49. King, M (ed.). Machine Translation Today: The State
of the Art. Edinburgh: Edinburgh University Press, 1987.
50. Kiraz, G. Computational Approach to Non-Linear
Morphology. Cambridge, UK: Cambridge University Press, 2000.
51. Kornai, A (ed.). Extented Finite State Models of
Language. Cambridge: Cambridge University Press, 1999.
52. Koskenniemi, K. Two-level morphology : a general
computational model for word-form recognition and production. Helsinki:
University of Helsinki, Dept. of Linguistics, 1983.
53. Levy, M. Computer-Assisted Language Learning:
Context and Conceptualization. Oxford : Oxford University Press, 1997.
54. Mani, I. Automatic Summarization. Amsterdam:
John Benjamins, 2001.
55. Mani, I. and M. Maybury ( eds.). Advances in
Automatic Summarization. Cambridge, Mass.: MIT Press, 1999.
56. Manning, C . (eds.). Probabilistic Linguistics.
Cambridge: MIT Press, 2002.
57. Manning, C. and H. Schutze. Foundations of Statistical
Natural Language Processing. Cambridge: MIT Press, 1999.
58. McEnery, T. and Wilson , A. Corpus Linguistics.
Edinburgh: Edinburgh University Press, 1996.
59. Melcuk, I. Dependency Syntax: Theory and Practice.
Albany, NY: SUNY Press, 1988.
60. Meyer, C.F. English Corpus Linguistics:An
Introduction. Cambridge : Cambridge University Press, 2002.
61. Mitkov, Ruslan. The Oxford Handbook of
Computational Linguistics. New York: Oxford University Press, 2009.
62. Newton, J ( ed.). Computers in Translation : A
Practical Appraisal. London: Routledge, 1992.
63. Nirenburg, S ( ed.). Machine Translation :
Theoretical and Methodological Issues. Cambridge : Cambridge University
Press, 1987.
64. O'Keeffe, A . McCarthy ,M. and Carter, R. From
Corpus to Classrooms. Cambridge: Cambridge University Press, 2007.
65. Pennington, M.C. The Power of Computer-Assisted
Language Learning. Houston: Athelstan, 1996.
66. Pereira, C.N., Fernando, Barbara and J. Grosz. Natural
Language Processing. London: MIT Press, 1994.
67. Pollard, C. and I. Sag. Head-Driven Phrase Structure
Grammar. Oxford: Blackwell, 1994.
68. Pollard, C. and Sag, I. Head-Driven Phrase
Structure Grammar. Chicago: University of Chicago Press, 1994.
69. Pustejovsky, J. The Generative Lexicon.
Cambridge, Mass.: MIT Press, 1995.
70. R.Beesley, Kenneth and Karttunen, Lauri. Finite
State Morphology. Stanford: CSLI Publications, 2003.
71. Ritchie, G.D., G.J.Russel, A.W. Black and S.G. Pulman.
Computational Morphology: Practical Mechanisms for the English Lexicon.
Cambridge, Mass.: MIT Press, 1992.
72. Roark, Brian and Sproat, Richard. Computational
Approaches to Morphology and Syntax. New York: Oxfor University Press,
2007.
73. Roche, E. and Schabes , Y (eds.). Finite-State
Language Processing. Cambridge, Mass.: MIT Press, 1997.
74. Sells, P. Lectures on Contemporary Syntactic
Theories. Stanford, Calif.: CSLI Publications, 1989.
75. Shieber, S.M. Constraint- Based Grammar Formalisms.
Massachusetts: MIT Press, 1992.
76. Shieber, S.M.,. An Introduction to
Unification-based Approaches to Grammar. Stanford: CSLI Publications, 1998.
77. Slocum, J (ed.). Machine Translation Systems.
Cambridge: Caambridge University Press, 1988.
78. Somers, H (ed.). Computers and Translation : A
Translator's Guide. Amsterdam: John Benjamins, 2003.
79. Sproat, R (ed.). Multilingual Text-to-Speech
Synthesis : The Bell Labs Approach. Dordrecht: Kluwer Academic Publishers,
1998.
80. Sproat, R. A Computational Theory of Writing
Systems. Cambridge , UK: Cambridge University Press, 2000.
81. —. Morphology and Computation. Cambridge,
Mass.:: MIT PRess, 1992.
82. Sproat, Richard. Language , Technology, And society.
Oxford: Oxford University Press, 2010.
83. Stubbs, M. Texts and Corpus Analysis. Oxford:
Blackwell, 1997.
84. Taylor, Paul. Text-to--Speech Synthesis. New
York: Cambridge University Press, 2009.
85. Teubert, Wolfgang (ed.). Text Corpora and
Multilingual Lexicography. John Benjamins, 2007.
86. van Santen, J.P.H. , R.Sproat, J.Olive and J.Hirshberg
(eds.). Progress in Speech Synthesis. New York: Springer Verlag, 1997.
87. Veronis, J (ed.). Parallel Text Processing:
alignment and Use of Translation Corpora. Dordrecht: Kluwer Academic Press,
2000.
88. Vossen, P (ed.). 1998. Dordrecht: Kluwer
Academic Publishers, Euro WordNet: A Multilingual Database with Lexical
Semantic Networks.
89. Wahlster, W (ed.). Verbmobil : Foundations of
Speech-to-Speech Translation. Berlin: Springer, 2000.
90. Waibel, A. and Lee, K.F. Readings in Speech
Recognition. Morgan Kaufmann, 1990.
91. Winograd, T. Understanding Natural Language .
New York: Academic Press, 1972.
92. Young, S.J. and G.Bloothooft ( eds.). Corpus-Based
Methods in Language and Speech Processing. Dordrecht: Kluwer Academic
Publishers, 1997.